இப்படி ஒரு தாராள மனச யார்கிட்டையும் பார்க்க முடியாது…. அப்படி என்ன செய்தார் நடிகர் ராகவா லாரென்ஸ் ?

காஞ்சனா என்ற உடன் நம் நினைவுக்கு வருவது கண்டிப்பாக நடிகர் ராகவா லாரென்ஸ்.அந்த அளவுக்கு இவருக்கு மக்கள் மத்தியில் பேர் மற்றும் புகழ் கிடைத்தது என்றால் மறுக்க முடியாது. நடிகர் ராகவா லாரென்ஸ் துவக்க நாட்களில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தார்.சில படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். படி படியாக முன்னேறி கதாநாயனாக தனது திறமையை நிரூபித்துள்ளார். நடிகராக பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு அதிகமாக ரசிகர்களை பெற்றுதந்தது காஞ்சனா-1,2,3 படங்கள் தான். இந்த திரைப்படம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்களை பெற்று தந்தது. இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார்.

2005-ல் இயக்குனர் பி.வாசு அவர்கள் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினி, பிரபு நடிகை ஜோதிகா, நயன்தாரா நடித்து வெளிவந்த சந்திரமுகி என்ற திரைப்படம் 800 நாட்களையும் தாண்டி வெற்றிகரமாக ஓடியது. அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை சந்திரமுகி-2 லாரன்ஸ் மற்றும் நடிகை அனுஷ்கா நடிக்க பி.வாசு அவர்கள் இயக்கதில் படம் வெளிவர உள்ளதாகவும் அதற்கான வேலைகள் நடைபெற்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பதோடு விட்டு விடாமல் தன்னால் முடிந்த உதவிகளை சமூகத்தில் நலிவடைந்தவர்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் சேவை செய்து வருகிறார்.இவர் பல்வேறு உதவிகளை ரசிகர்கள் மூலமாகவும், அறக்கட்டளை மூலமும் செய்து வரும் தொண்டினை சமூக வலைத்தளங்களில் பார்க்கலாம். தற்போது அவர் முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதுவரை தான் செய்த உதவிகளுக்கு நன்கொடை அளித்த மக்களுக்கு நன்றி கூறியதோடு இனி யாரும் தனது அறக்கட்டளைக்கு நன்கொடை அனுப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். தான் நல்ல நிலைமையில் இருப்பதால் தன்னுடைய அறக்கட்டளைக்கு தான் முழு பொறுப்பேற்று கொண்டு முழுச் செலவையும் ஏற்று நடத்தப்போதாக அறிவித்துள்ளார். தற்போது சில படங்களில் பணிபுரிந்து வருவதால் தனக்கு போதுமானளவு வருமானம் கிடைப்பதால் யாரும் அறக்கட்டளைக்கு நன்கொடை அனுப்பவேண்டாம் என்றும் தனக்கு மக்களின் ஆசீர்வாதம் மட்டுமே போதும் எனவும் செய்தி வெளியிட்டுள்ளார்.

You may have missed