இப்படி கூட மன்னிப்பு கேட்கலாமா.. தவறு செய்த மாணவன் மன்னிப்பு கேட்டதை பாருங்க…

பள்ளிகளில் சிறுவர்கள் செய்யும் குறும்புத்தனத்திற்கு அளவே இருக்காது. அவர்களின் சேட்டைகள் விநோதமானதாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். சில சமயங்களில் சிறுவர்கள் செய்யும் சேட்டைகள் எல்லை மீறும் போது ஆசிரியர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். சிறு தண்டனைகள் கொடுத்து அவர்களுக்கு அவர்கள் செய்த செயலின் வீரியத்தை புரிய வைப்பார்கள். மீண்டும் நிகழாத வண்ணம் பார்த்து கொள்வார்கள்.

குழந்தைகளாக இருக்கும் போது அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ரசிக்கும் படி இருக்கும். ஆசிரியர்கள் கண்டிப்புடன் நடந்து கொண்டாலும் குழந்தைகள் மேல் பிரியம் இருக்கும். அவ்வாறான காட்சி தான் இந்த காணொலியில் இடம் பெற்றுள்ளது. சிறுவன் ஒருவன் ஆசிரியர் எச்சரிக்கை செய்தும் மேலும் குறும்புதனம் செய்து கொண்டிருந்தார். இதனால் கோபம் கொண்ட ஆசிரியர் அவனிடம் கோபம் கொண்டு பேசாமல் தனது இருக்கையில் வந்து அமருகிறார். இதை கவனித்த சிறுவன் ஆசிரியரிடம் வந்து மன்னிப்பு கேட்டு தான் தவறு செய்யமாட்டேன் என்று கூறுகிறார். இதனை கண்டு கொள்ளாமல் ஆசிரியர் பேசாமல் இருக்கவே அந்த சிறுவன் மீண்டும் ஆசிரியரை சமாதானம் செய்ய அவருடைய கன்னத்தில் முத்தம் இட்டு மன்னிப்பு கோருகிறான்.

சமாதானம் ஆன ஆசிரியை மீண்டும் அவ்வாறு செய்ய கூடாது என்று எச்சரித்து சிறுவனை அணைத்து முத்தம் இட்டு மன்னித்து பேசுகிறார். இதனை பார்க்கும்போது ஆசிரியர் மாணவன் போல் அல்லாமல் தாய் மகனுடைய பாச பிணணைப்பு போல் இருக்கிறது. இதனை சமூகவலைத்தளவாசிகள் ஆச்சர்யத்துடன் ரசித்து பாராட்டி வருகின்றனர்.

You may have missed