தேன் போன்ற குரலில் பாடி அசத்திய அரசு பள்ளி மாணவி… தனி திறமையை நிரூபித்து சாதனை படைத்த நிகழ்வு..!

பள்ளி, கல்லூரியில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். மாணவ மாணவிகள் தங்கள் தனி திறமையை வெளிக்கொண்டு வர சிறந்த நிகழ்ச்சியாக இருக்கும். படிப்பில் மட்டும் இன்றி அவர்கள் தங்களை விளையாட்டு திறமையையும், தனி திறமைகளான ஓவியம் வரைதல், கதை, கவிதை எழுதுதல்,நடனம் ஆடுதல், பாடல் பாடுதல், பேச்சு திறமை, களிமண் சிற்பம் செய்தல், புகைப்படம் எடுத்தல் போன்ற திறமைகளை கண்டறிந்து அவர்களின் தனி திறமையை ஊக்குவிப்பதற்காக கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்கள் அரசு நடுநிலை பள்ளி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு கலை திருவிழா நடத்தி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும்படி பள்ளி கல்வி துறை அரசு பள்ளிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.

சிறப்பாக தனி திறமையை வெளிப்படுத்தும் முதல் 20 மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அரசு சார்பில் வெளிநாட்டு கல்வி சுற்றுலாவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அறிவித்திருந்தது.

பள்ளி கல்வி துறை சமூக வலைத்தளமான டுவிட்டர் பக்கத்தில் அரசு பள்ளி மாணவி பாடிய தென்றல் வந்து தீண்டும் போது பாடலை பகிர்ந்துள்ளனர். அரசு பள்ளி மாணவ மாணவிகளின் திறமையை ஊக்குவித்தால் அவர்கள் எதிர்காலத்தில் நல்ல நிலைக்கு வருவார்கள். அந்த பாடலை பாடிய மாணவியின் திறமையை இணையவாசிகள் பாராட்டி கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.அந்த காணொலியை இங்கே காணலாம்…..

You may have missed