சிரித்த முகத்துடன் இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா.. 4 முறை தேசிய விருது வாங்கிய பிரபல பாடகி….!

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இடம்பெற்ற ‘மன்னிப்பாயா’ பாடல் ஜிலுன்னு ஒரு காதல் படத்தில் இடம்பெற்ற முன்பேவா அன்பேவா…… 7-G,ரெயின்போ காலனி படத்தில் இடம்பெற்ற நினைத்து நினைத்து பார்த்தால்…..போன்ற பல பாடல்கள் 90-ஸ் மற்றும் 2கே-கிட்ஸ் விரும்பி கேட்கும் பாடல்கள் ஆகும். தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற ராட்சச மாமனே……பாடல் மக்கள் விரும்பி கேட்கும் பாடல்கள். இந்த பாடல்கள் அனைத்தும் பாடியது இந்தியாவின் பிரபல ஹெவன்லி வாய்ஸ் பாடகி ஸ்ரேயா கோஷல். இவர் இதுவரை 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். தனது முதல் தேசிய விருதினை 2002-ல் பாலிவுட்டில் வெளிவந்த தேவதாஸ் படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. இவர் தனது பதினாறு வயதில் 2000-ம் ஆண்டு ஜி-டிவி நடத்திய சரி,கா,மா என்ற சூப்பர் சிங்கர் இறுதி போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதன் பிறகு பாலிவுட் தயாரிப்பாளர் சஞ்சய் லீலாவால் ஹிந்தியில் பின்னணி பாடகியாக அறிமுகம் செய்தார்.அறிமுகம் ஆன முதல் பாடலிலேயே அவருக்கு தேசிய விருது கிடைத்தது.

ஸ்ரேயா கோஷல் மேற்கு வங்காள மாநிலத்தில் முர்சிபாத்தில் ஒரு பெங்காலி தம்பதியருக்கு மகளாக 1984-ல் பிறந்தார். இவருடைய தந்தை பிஸ்வஜித் கோஷல் இந்திய அணு சக்தி கழகத்தில் மின் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். தயார் ஷர்மிஸ்தா கோஷல் இவர் இலக்கிய பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். இவருக்கு ஒரு இளைய சகோதரர் இருக்கிறார் அவர் பெயர் சௌம்யதீப். ஸ்ரேயா தனது நான்காவது வயதில் இசை பயில ஆரம்பித்துள்ளார். ஆறாவது வயதில் ஹிந்துஸ்தான் கிளாசிக்கல் இசையில் கற்க ஆரம்பித்துள்ளார். அதன் பிறகு பதினாறாவது வயதில் ஜி- தொலைக்காட்சியில் ‘சரிகம’நிகழ்ச்சியில் பங்குபெற்று வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இந்தியாவின் அனைத்து மொழி பாடல்களிலும் பாடி மக்களின் மனகளில் இடம்பிடித்துள்ளார்.

2015-ல் பள்ளி தோழரான ஷிலாதித்யா முகோபாத்யாய என்ற நீண்ட கால நண்பரை திருமணம் செய்துள்ளார்.இத்தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை 2021-ல் பிறந்தது. தற்போது சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும், பல திரைப்பட பாடல்களை பாடி அசத்தி வருகிறார் கோஷல். அவரது குழந்தை பருவ புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது…..அந்த புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது….

pic1

pic2

pic3

You may have missed