கம்பு சுத்துவதில் நான் ஒரு கிங் என்று வித்வானுக்கே சவால்விடும் சிறுமி…. என்ன அழகா கம்பு சுத்துறாங்க பாருங்க..!
சிலம்பம் நம் தமிழர்களின் வாழ்க்கையில் ஒன்றிப்போனது. பொங்கல் பண்டிகையின் போது சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் தவறாது நடைபெறும். இன்றும் பள்ளிகளில் சிலம்பம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. சிலம்பத்திற்கென்ற தனி வரலாறு இருக்கிறது. பண்டைய காலங்களில் போட்டிகள் நடத்தி வீரர்களை ஊக்குவித்தனர். முற் காலத்தில் ஆண்கள் மட்டுமே விளையாடும் விளையாட்டாக இருந்தது. தற்போது பெண்களும் பயிற்சி பெற்று சிலம்பம் சுற்றுகின்றனர். இது கம்பு சுற்றுதல் என்றும் அழைக்கப்படுகிறது.
சிலம்பம் தற்போது கோவில் விழாக்களில், பண்டிகை காலங்களில் வீரர்கள் கம்பு சுற்றுவதை காணலாம். முறையாக பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே கம்பு சுற்ற முடியும். அரசர்கள் காலம் தொட்டு சிலம்பம் வீர கலைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இருவர் இந்த போட்டியில் பங்கு பெற்று ஒருவர் எதிராளியின் கம்பை தடுத்து மற்ற வீரரின் உடலை தொட்டால் அவருக்கு புள்ளிகள் கிடைக்கும். பெண்கள் மட்டும் அல்லாது சிறுவர், சிறுமிகளும் கம்பு சுற்றுகின்றனர்.
வீர கலைகளில் ஒன்றான தமிழர்களில் பாரம்பரிய விளையாட்டை குழுவாக சிறுமிகள் அணி வகுத்து சுழற்ற நடுவில் தனியாக சிறுமி அச்சு பிசறாமல் சுற்றும் இந்த காணொலி சமூகவலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.