தோல்வியிலும் வெற்றி பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்த நிகழ்வு…. இன்னொருவர் தடுமாற்றத்தில் எனக்கு வெற்றி தேவை இல்லை…… செயலில் காட்டிய உண்மை வீரர்..!

உலக கோப்பை கால்பந்து விளையாட்டில் ரசிகர்கள் அல்லா தோரின் மனதிலும் இடம் பிடித்த வீரர்…….அப்படி என்ன கோல் அடித்தார்…… என்று இணையத்தை புரட்டி போட்ட நிகழ்வு……உலக கோப்பை கால்பந்தாட்டம் என்ற உடன் நினைவுக்கு வருவது கத்தார். அரபுலகில் முதன் முதலாக நடைபெறும் உலக கோப்பை கால்பந்தாட்டப் போட்டியாகும். நவம்பர் 20 முதல் டிசெம்பர் 18 வரை கத்தாரில் 5 முக்கிய நகரங்களில் நடைபெறும் மாபெரும் நிகழ்வாகும். 2018-ல் நடைபெற்ற இறுதி போட்டியில் குரேஷியாவை 4-2 என்ற எண் கணக்கில் உலக கோப்பை பட்டத்தை பிரான்ஸ் பெற்றது.

கத்தாரில் நடைபெறும் fifa கால்பந்தாட்ட போட்டிகள் பல சுவாரசிய நிகழ்வுகளை ஏற்படுத்தியுள்ளது. கத்தார் மக்கள் வந்தாரை வாழவைக்கும் தமிழகம் போன்று விருந்தோம்பலுக்கு சிறந்த உதாரணமாக திகழ்ந்து வருகிறது. கத்தாரில் உலக கோப்பை போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு அவர்களது வீடுகளில் விருந்து வைத்து கவனித்த…. பேரன்பை உலகம் முழுவதும் பாராட்டை பெற்றுள்ளனர். கத்தாரில் 3 மில்லியன் மக்கள் தொகைக்கும் குறைவானவர்கள் வசிக்கிறார்கள். இங்கே 2000 அதிகமான மசூதிகள் இருக்கின்றன. கத்தார் மக்கள் தங்களுடைய பாரம்பரிய பழக்கவழங்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.கத்தார் கால்பந்தாட்டப் போட்டியில் சர்ச்சைகள் இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து 1மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் போட்டியை காண படையெடுத்துள்ளனர்.

கிரிக்கெட் என்றால் சச்சின், டோனி, விராட் கோலி போன்ற ஆளுமை நிறைந்த பிரபலங்கள் நினைவுக்கு வருவார்கள். கால்பந்தாட்டம் என்றால் உலகில் உள்ள அனைத்து கால்பந்தாட்ட ரசிகர்களுக்கும் நினைவுக்கு வருவது கிறிஸ்டியானோ ரொனால்டோ . இவர் போர்ச்சுகல் நாட்டின் கால்பந்தாட்ட கேப்டன் ஆவார்.கடந்த வாரம் தென் கொரிய அணியுடன் போட்டியிட்டதில் 1-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி தோல்வியடைந்தது. இரண்டாவது ஆடுகளத்தில் விளையாட அவரது பயிற்சியாளர் பெர்னாண்டோ சாண்ட்டோஸ் கிறிஸ்டியானோ ரொனால்டோ உடனான கருத்து வேறுபாட்டால் அவரை மேற்கொண்டு விளையாட அனுமதிக்க வில்லை. மேலும் சுவிஸ்சர்லாந்து உடனான போட்டியில் களம் இறங்குவது சந்தேகம் என செய்தி நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன.

fifa உலக கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் வீரர்களும் ரசிகர்களும் மல்லு கட்டி கொண்டிருக்கும் வேலையில் இங்கு ஒரு அதிசயம் நடந்துள்ளது. கால்பந்தை இரு எதிரணி வீரர்கள் கோல் அடிக்க முற்பட அதில் ஒருவரின் காலில் காயம் ஏற்பட்டு அவரால் மேற்கொண்டு முன்னேற முடியவில்லை. இதனால் எதிரணி வீரர் அதை பார்த்து கோல் அடிக்காமல் விட்டு விடுகிறார். எதிரணி வீரர்கள் அவரின் செயலை பாராட்டி தட்டி கொடுக்கின்றனர். கோல் அடிக்க கிடைத்த வாய்ப்பை எதிரணி வீரர் போட்டியில் காயம் ஏற்பட்டு விளையாடமல் தடுமாறிய தோல்வியில் வெற்றி தேவை இல்லை…… என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டிய வீரரின் செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த காணொலியை இங்கே காணலாம்

You may have missed