முதல் முதலாக காது குத்திய குட்டி தேவதை… க்யூடாக கொடுத்த ரியாக்சன பாருங்க.. என்ன அழகான காட்சி…
‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.
குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத் துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.
இங்கேயும் அப்படித்தான் ஒரு குட்டிக் குழந்தைக்கு முதன் முதலாகக் காது குத்துவார்கள். ஒரு ஜூவல்லரிக்கு அழைத்துப் போய் காது குத்த போனார்கள். ஆனால் அடுத்த நொடியில் தன் காதில் வலிக்கப் போகிறது. குத்தப் போகிறார்கள் என்பதை அறியாத அந்தக் குழந்தை வெள்ளந்தியாக சிரிக்கிறது. காது குத்திய சில நொடிகளுக்கு மட்டும் அழும் குழந்தை, தொடர்ந்து அழகாக புன்னகை பூக்கிறது. இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.