இந்த மனசு தான் சார் தெய்வம்.. தள்ளாத வயதில் இந்த முதியவர் செய்த செயலைப் பாருங்க…!

சேவை செய்வதற்கு வயது எப்போதுமே தடை இல்லை. நல்ல மனம் இருந்துவிட்டாலே போதும். அதை மெய்ப்பிக்கும்வகையில் இப்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலி என பெயர் எடுத்தது நாய்கள் தான். அதனால் தான் காவல்துறையிலேயே குற்றங்களை கண்டுபிடிப்பதில் நாய்களை பயன்படுத்துகின்றனர். மோப்பநாய்கள் காவல்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதபடுகிறது.

பொதுவாகவே நாய்கள் நன்றி உணர்வுக்கு மிகவும் பிரசித்தி பெற்றவை. நாயை வீட்டுக் காவலுக்கு, வேட்டைக்கு, பாசம் காட்டி வளர்ப்பதற்கு என பலவகையிலும் பயன்படுத்துபவர்களைப் பார்த்திருப்போம். அதனால் தான் பலரும் தங்கள் வீட்டில் நாய் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதேநேரம் வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு நேரத்திற்கு சாப்பிட உணவு கிடைத்துவிடும். ஆனால் தெருநாய்களுக்கு அப்படி இல்லை.

அவை உணவைத் தேடி உணவகங்களின் வாசல்களிலும், வீட்டுப் பக்கங்களிலும் நிற்கும் காட்சியை நாம் பார்த்திருப்போம். இங்கே ஒரு வயதான தாத்தா, அதாவது அவரே இனொருவரின் அரவணைப்பைத் தேடும் வயதில் இருக்கிறார். ஆனால் அவர், தானே தன் வீட்டில் சுடச் சுட சோறு பொங்கி, தன் சைக்கிளின் பின் கேரியரில் வைத்து சாலையோரம் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு அதை வழங்குகிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். இந்த மனசு தான் தெய்வம் என சொல்வீர்கள். இதோ அந்தக் காணொலி…

You may have missed