தக்க சமயத்தில் ஜொலிப்பார்…! பிக் பாஸ் ரஞ்சித் குறித்து முன்னாள் மனைவி உருக்கமான பேச்சு…!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 8 போட்டியாளராக 18 பேர் பங்கு கொண்டனர். மேலும் பிக் பாஸ் விளையாட்டு தற்போது சூடு பிடித்து வருகிறது. தொகுப்பாளராக வரும் விஜய் சேதுபதி போட்டியாளர்கள் செய்யும் தவறுகளை சுட்டி காட்டியும் போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுத்ததும் அருமையாக நிகழ்ச்சியை தொகுத்து வருகிறார்.இந்நிலையில் 90s கலகட்டத்தில் வில்லன் ஆக நடிப்பில் ரசிகர்கக்ள் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகர் ரஞ்சித்.
இவர் அந்த நேரத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர். மேலும் இவரது முன்னாள் மனைவி பிரியா ராமனும் 90’s கால கட்டத்தில் பெரிய நடிகை. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் இருவரும் சின்னத்திரையிலும் பல தொடர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் ரஞ்சித் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக பங்கு கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார்.
இந்நிலையில் ரஞ்சித்தின் முன்னாள் மனைவி அவரின் பிக் பாஸ் விளையாட்டை பற்றி பேசுகையில் அவர் ஆர்வ கோளாறு கிடையாது. அவருக்கு எதை எப்போது பண்ண வேண்டும் என்பது தெளிவாக தெரியும். தக்க சமயத்தில் அவர் ஜொலிப்பார் எனவும் உருக்கமாக பேசியுள்ளார். மேலும் ஜாக்லின் மற்றும் ரஞ்சித் தந்தை மற்றும் மகள் பர்பாமென்ஸ் அந்த டஸ்கில் ரஞ்சித் மிகவும் அருமையாக செய்திருந்தார் எனவும் ரஞ்சித் குறித்து முன்னாள் மனைவி பிரியராமன் கூறியுள்ளார். இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.