சொந்த மதுக்கடையை முதலில் மூடுங்கள்.. அதன் பிறகு மது ஒழிப்பு பத்தி பேசுங்கள்.. கேலியும் கிண்டலுமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் இருப்பவர் தான் இளைய தளபதி விஜய். இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். தமிழ் சினிமாவில் அதிக அளவில் சம்பளம் வாங்கும் நடிகரும் ஆவர். இளையதளபதி விஜய் சமீபத்தில் அரசியல் பயணம் மேற்கொள்ளலாம் என நினைத்து தமிழக வெற்றி கழகம் ஒன்றை உருவாக்கி உள்ளார். மேலும் இவர் அரசியலுக்காக சினிமாவில் இருந்து விலக போவதாகவும் கூறியுள்ளார். இவர் இறுதியாக நடிக்கும் படம் தளபதி 69. மேலும் இவர் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாம் எனவும் முடிவெடுத்து தன்னுடைய கட்சியினை ஆரம்பித்தார்.

இந்நிலையில் இவரின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்தது. இவரின் முதல் மாநாட்டில் கலந்து கொள்ளவே ஏராளமான தொண்டர்கள் வந்தனர். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் தன்னுடைய கழகத்தின் கொள்கைகளை தொண்டர்கள் முன்பு கூறினார். மேலும் இவருடைய ஆவேசமான பேச்சு மற்றும் கருத்துக்கள் பலரையும் ஈர்த்துள்ளது.

மேலும் இவரும் அனைத்து அரசியல்வாதிகளை போலவே முதலில் மதுக்கடை ஒழிப்பு என்று கூறி உள்ளார். இதனை பலரும் விமர்சித்து வருகிறார்கள். அதாவது தமிழக வெற்றி கழகத்தின் பொது செயலாளராக புஷ்லி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் புதுசேரியில் எம்.எல்.வே ஆக இருந்தவர். இவருடைய பெயர் ஆனந்த் தான். இவருடைய தெரு பெயர் புஷ்லி அதனை வைத்து தான் இவரை புஷ்லி ஆனந்த் என கூறுகிறார்கள். இவருக்கு சொந்தமாக மதுக்கடை இருக்கிறது. அதனை முதலில் மூட சொல்லி விட்டு அல்லவா மற்ற கடைகளை மூட சொல்லவேண்டும் என்று நெட்டிசென்கள் கேலியும் கிண்டலுமாக விமர்சித்து வருகிறார்கள்.

You may have missed