வெளிநாட்டிலும் கலக்கும் “கடவுளே அஜித்தே” கோஷம்… ட்ரெண்டிங் ஆகும் வைரல் வீடியோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் தான் அல்டிமிஸ்டார் அஜித் குமார்.வலிமை படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சி படத்தை எதிர் பார்த்து கொண்டு இருக்கிறார்கள் தல ரசிகர்கள். இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் என பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிரூத் இசை அமைத்துள்ளார்.இந்த படம் இறுதி கட்ட படப்பிடிப்பை நெருங்கிய வேளையில் இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது. மேலும் இந்த படத்தை எதிர் பார்த்து தல அஜித்தின் ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

விடாமுயற்சியை தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைதிரி மூவீ மைக்கேர்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலும் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக எங்கு பார்த்தாலும் “கடவுளே அஜித்தே” என்ற கோஷம் கேட்டு கொண்டே இருக்கிறது. அஜித் ரசிகர்கள் பொதுவாக தல தல என்று தான் சவுண்ட் போடுவார்கள்.

ஆனால் தற்போது ட்ரெண்டிங்கா “கடவுளே அஜித்தே” என்று கோஷம் போடுகிறார்கள். இந்த கோஷம் சமூக வலைத்தளங்களில் மட்டும் அல்ல வெளிநாடுகளிலும் பரவி உள்ளது. வெளிநாட்டவர் “கடவுளே அஜித்தே” என்று கோஷம் போடும் வீடியோ ஓன்று தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோ மிகவும் ட்ரெண்டிங் ஆகி கொண்டிருக்கிறது.