நீண்ட நாட்களுக்கு பிறகு குத் விக் கோமாளி டீம் உடன் மணிமேகலை.. புகழ் பகிர்ந்த மொட்டை மாடி புகைப்படம்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!
விஜய் தொலைகாட்சியில் அதிக ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சி “குத் விக் கோமாளி”. இதில் பிரபல தொகுப்பாளர்களான மணிமேகலை பிரியங்கா இடையே மோதல் ஏற்பட்டது ரசிகர்களுக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .விஐய் டெலிவிஷன் பிரபலங்கள் பலபேர் பிரியென்காகு ஆதரவாகவும் சிலபேர் மணிமேகலைக்கு ஆதரவாகவும் தங்களுடைய கருத்துக்களை கூறி வந்தனர் .மேலும் மணிமேகலை தன்னுடைய ஆதரவாளர்கள் ரசிகர்களுக்கு கூறுகையில் பிரியங்காக்கும் எனக்கும் நடந்த மோதலை பற்றி மட்டும் பேசினால் போதும் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி யாரும் ஏதும் கூற வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
மேலும் மணிமேகலை தன்னுடைய யூடுப் பக்கத்தில் கூறுகையில் தனக்கும் சுய மரியாதையை இருப்பதாகவும் அதனால் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில் குத் விக் கோமாளி டீம் உடன் மணிமேகலை எடுத்து கொண்ட புகைப்படங்களை தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது நீண்ட நாட்களுக்கு பிறகு குத் விக் கோமாளி புகழ், பாலா, தர்ஷா குப்தா மற்றும் மணிமேகலை சந்தித்துள்ளனர். அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து மொட்டை மாடியில் வைத்து புகைப்படம் எடுத்துள்ளனர்.
அந்த புகைபடத்தை புகழ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இத்னை பார்த்த ரசிகர்கள் மீண்டும் குத் விக் கோமாலியில் மணி, பாலா வருகிறார்களா என கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் இந்த புகைப்படத்தை பகிர்ந்த புகழ் நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்கிறோம் இது விளம்பரத்துக்காக எடுக்கப்பட்ட புகைப்படம் என பதிவிட்டுள்ளார். இவர்களின் இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.