எந்த ஸ்கூல்ப்பா நீ சிரிப்பை அடக்க முடியலப்பா சாமி… உயிர் எழுத்துக்கள் வரிசையை எப்படி சொல்லுறாருப்புல பாருங்க..
குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். அவர்களின் செய்கைகள், பேச்சை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ரசித்துக்கொண்டே இருக்கலாம். இங்கேயும் அப்படித்தான் தமிழ் மொழியை ஒரு பொடியன் உச்சரிக்கும் ஸ்டைல் வைரலாகி வருகிறது.
பொதுவாகவே குழந்தைகள் பேசுவது, படிப்பது எல்லாமே நம்மை வெகுவாக ரசிக்கவைக்கும். குழந்தைகள் பேசுவதை ரசித்துக் கொண்டே இருக்க முடியும். குழந்தைகளுக்கு பாடத்தை எளிதாக சொல்லிக் கொடுக்கும்வகையில் இப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களே ரொம்பவும் ராகத்தோடு சொல்லிக் கொடுக்கிறார்கள். அப்படி இங்கே ஒரு பொடியனுக்கு அவனது பள்ளியில் உயிரெழுத்தான அ, ஆ, இ.ஈ, உ என்பனவற்றை ரசனையோடு ராகமாக சொல்லிக் கொடுத்துள்ளனர். அதை அப்படியே அந்த பொடியன் சொல்ல, அதை ஒருவர் வீடியோவாக எடுத்து பகிர்ந்துள்ளார்.
பாடத்தை எளிமையாக்கும் முயற்சியான இது, திடீரென கேட்டால் சிரிப்பையும் வரவழைக்கிறது. அதைவிட முக்கியமானது, அந்த பொடியன் சிறுவனாக இருந்தாலும் அவன் ஹேர் ஸ்டைல் இருக்கிறதே அதை வேற லெவல் என்றே சொல்லிவிடலாம். இதோ நீங்களே பாருங்களேன்.