நடிகர் காளிதாஸ் மற்றும் தாரிணிக்கு நேரில் சென்று திருமண வாழ்த்துக்கள் தெரிவித்தார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.. மகிழ்ச்சியில் திருமண ஜோடிகள்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் காளிதாஸ். இவர்தமிழ் மற்றும்  மலையாள சினிமாவில் புகழ்பெற்ற  நடிகரான நடிகர் ஜெயராம் மகன் ஆவார். இவர்  மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். மேலும் அவர் தமிழில் ராயன், பாவக்கதைகள் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் காளிதாஸ் தாரணி என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக கூறியிருந்தார். அவர்களின் திருமணம் டிசம்பர் 8 ம் தேதி குருவாயூர் கோவில் வைத்து எளிய முறையில் இரு வீட்டாரின் முன்னிலையில் நடந்து முடிந்தது. இந்நிலையில் இவர்களின் திருமண வரவேற்பு இன்று (டிச.11) மாலை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வைத்து நடக்க இருக்கிறது.

இதில்  தமிழக முதல்வர் ஸ்டாலின்  கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் அவர் கேரளா செல்வதால் நேற்று மாலை (டிச.10) நடந்த சங்கீத் நிகழ்ச்சியில் தனது மனைவி துர்க்கா ஸ்டாலினுடன் நேரில் சென்று திருமண ஜோடிகளுக்கு  வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளனர். அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed