லோகேஷின் பென்ஸ் படத்தில் என்ட்ரி கொடுக்க இருக்கும் முன்னணி பிரபலம்.. யார் அந்த பிரபலம் தெரியுமா..!
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது இயக்குனராக மட்டும் அல்லாமல் தயாரிப்பாளராகவும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவரது தயாரிப்பில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் பென்ஸ். இந்த படத்தில் நடிகர் லாகவா லாரன்ஸ் ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படமும் லோகேஷின் எல்சியு வில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் குறித்து புதிதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் மாதவன். இவர் இந்த படத்தில் நடிகர் லாகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ஆனால் அவர் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. லாரன்ஸ்க்கு வில்லனாக நடிப்பார் என்று உத்தேசமான முறையில் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் இந்த இரு பெரும் நடிகர்களின் கூட்டணியில் வரும் படத்தினை எதிர்பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பென்ஸ் படத்தில் மாதவனின் இந்த மாஸ் என்ட்ரி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.