குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த நடிகை கீர்த்தி சுரேஷ்.. திருமணம் எங்கு! எப்போது! ஓப்பன் டாக்..!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் குழந்தை நட்சத்திரமாக மலையாள படங்களில் அறிமுகம் ஆனார். இது என்ன மாயம் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனவர். அதனை தொடர்ந்து பல படங்கள் நடித்துள்ளார். ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சாமி 2, அண்ணாத்த, சர்கார், சண்டக்கோழி 2 என இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே அமைந்தது. இவருக்கு என்று தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்துக்கொண்டார்.
மேலும் பாலிவுட் பக்கம் தன்னுடைய கவனத்தை கொண்டு சென்றுள்ள கீர்த்தி இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பேபி ஜான் என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளது. தற்போது இவர் கைவசம் ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. அதனை கீர்த்தியும் உறுதி செய்தார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், தன்னுடைய அம்மா மேனகா, அப்பா சுரேஷ் குமார், சகோதரி ரேவதி சுரேஷ் உடன் இணைத்து அதிகாலை விஐ பி தரிசனம் மூலம் குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார். மேலும் அதன் பிறகு வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த கீர்த்தி நீண்ட நாட்களுக்கு பிறகு ஏழுமலையானை தரிசித்து மனதுக்கு இதமாக உள்ளது எனவும் மேலும் அடுத்த மாதம் திருமணம் எனவும் திருமணம் கோவாவில் நடைபெறும் எனவும் வெக்கத்துடன் கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.