மாரி செல்வராஜ் உடன் கைகோர்க்கும் நடிகர் விஜய் சேதுபதி.. உற்சாகத்தில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் தான் மாரி செல்வராஜ். இவர் முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே அமைந்துள்ளன. இந்நிலையில் பரியேறும் பெருமாள் முதல் கர்ணன், மாமன்னன் என வெற்றி படங்களையே கொடுத்து வரும் இவர் தன்னுடைய வாழ்க்கை கதையை வைத்து  வாழை  என்ற படத்தினை இயக்கினார். அதுவும் வெற்றி படமாகவே அமைந்தது.

மேலும் மாரி செல்வராஜ் நடிகர் விக்ரம் மகனான துருவ் விக்ரம் உடம் பைசன் என்னும் படத்தை இயக்கி வருகிறார். அதை தொடர்ந்து  மாரி செல்வராஜின் அடுத்த படத்தில்  நடிகர் கார்த்தி நடிக்க உள்ளார். இதனை தொடர்ந்து நடிகர் ரஜினி வைத்தும் மாரி செல்வராஜ் ஒரு படம் இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி வைத்தும் ஒரு படம் மாரி செல்வராஜ் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

மேலும் தற்போது விஜய் சேதுபதி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் படம் தான் விடுதலை 2. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பாகம் 2 உருவாகி உள்ளது.இந்த படம் டிசம்பர் 20 ம் தேதி வெளிவர உள்ளது. இந்நிலையில் மாரி செல்வராஜ் மற்றும் வவிஜய் சேதுபதி கூட்டணி குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

You may have missed