சீனாவில் வசூலில் பட்டைய கிளப்பும் மகாராஜா.. முதல் நாளே இத்தனை கோடிகளா..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய்சேதுபதி. இவர் நடிகராக தான் நடிப்பேன் என்று கூறாமல் எந்த கேரக்டர் குடுத்தாலும் அதற்க்கு ஏற்றவாறு நடிப்பார். பல படங்களில் வில்லனாகவும் நடித்துள்ளார். பல வெற்றி படங்களையும் கொடுத்துள்ளார். இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த படம் தான் மகராஜா.

இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தினை இயக்குனர் நித்திலன் ஸ்வாமிநாதன் இயக்கினார். மேலும் இந்த படத்தில் சச்சனா , அனுராக், சிங்கம் புலி, அபிராமி, முனிஸ்கர் என பலர் நடித்துள்ளனர். மேலும் வித்தியாசனமான கதைக்களத்தை கொண்ட து.

 இந்த படம் உலகளவில் சாதனையில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தினை தற்போது சீனாவில் வெளியிட்டுள்ளனர். இதில் பிரீ புக்கிங் முதல் நாள் வசூலில்  10 கோடி வரையும்  இரண்டாம் நாள் வசூலில்  3 கோடி வரையம்  பெற்றுள்ளது. இந்த படம் மாபெரும் வசூல் செய்து சீனாவிலும் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You may have missed