இந்த பிரச்சனைகளை போக்க ஆண்கள் கண்டிப்பாக கற்றாழை சாப்பிடுங்க..
சருமப் பாதுகாப்பு, கூந்தல் வளர்ச்சி, மருத்துவத்தன்மை என கற்றாழையின் பயன்பாடுகள் ஏராளம். கற்றாழையில் அதிக அளவில் ஆண்டி வைரல், பூஞ்சை எதிர்ப்புப் பொருள் ஆகியவை இருப்பதனால் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்படுத்துகிறது.
கற்றாழை நம் உடலில் தேங்கியிருக்கும் நச்சுக்களையும் வெளியேற்றி ஆரோக்கியமான பாதைக்கு அழைத்துச் செல்கிறது. கற்றாழையின் ஜெல்லில் கால்சியம், மக்னீசியம், செலினியம், காப்பர் போன்ற தாதுக்கள் உள்ளது. இது நமது உடலில் மெட்டபாலிசத்தை அதிகரித்து உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொடுக்கிறது.
இதேபோல் கற்றாழையை ஜூஸாக குடித்தால் நமது உடலின் உள்ளுருப்புகளில் தேங்கி இருக்கும் நச்சுக்களை வெளியேற்றிவிடும். இதனால் உடலும் சுத்தமாகும். இதேபோல் கீழ் வாத நோயாளிகளுக்கும் கற்றாழை அருமருந்து. கற்றாழையில் உள்ள அமினோ அமிலமான பிராடிகைனாச் மூட்டுக்களில் ஏற்படும் அலற்சியை போக்குகிறது.
இதேபோல் தொடர்ந்து கற்றாழை ஜூஸ் குடித்தால் பல் இடுக்குகளுக்கு இடையே படிந்திருக்கும் கரைகள், வாய் துர்நாற்றத்தையும் போக்கிவிடும். உடல் எடையை குறைத்து, கெட்ட கொழுப்பை கரைப்பதிலும் கற்றாழை முக்கியப்பங்கு வகிக்கிறது. இதேபோல் தொடர்ந்து கற்றாழை ஜெல்லை சாப்பிட்டு வருபவருக்கு உடல் சுற்றுப்புற காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப காக்கப்படும்.