தலைமுடி அடர்த்தியாக வளர வேண்டுமா? கற்றாழையும், சின்ன வெங்காயமும் நிகழ்த்தும் அற்புதம்..!

நாம் குளிக்கும் போதும், தலை சீவும்போதும் முப்பது முதல் ஐம்பது முடிகள் வரை நாள் ஒன்றுக்கு உதிர்வது நார்மல் தான் என கூந்தல் பராமரிப்பு நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால் சிலருக்கு இது கொத்து, கொத்தாக உதிர்கிறது. இவர்கள் இதை மட்டும் செய்தாலே போதும். முடி உதிர்வை நீக்குவதோடு, முடியையும் அடர்த்தியாக வளரச் செய்து விடலாம்.

இதற்கு தேவையான அளவு கற்றாழை ஜெல்லும், 5 சின்ன வெங்காயமும் போதும். இந்த சின்ன வெங்காயத்துக்கு நுண்கிருமிகளையும், பூஞ்சையையும் எதிர்த்து போராடும் தன்மை இருக்கிறது. இது முடியின் வேருக்கு ஊட்டம் கொடுக்கும். இதில் இருக்கும் சல்பர் முடி உடைவை தடுக்கும். சின்ன வெங்காயத்தில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் இளநரை வரவிடாமல் பார்த்துக் கொள்ளும். பேன், பொடுகுத்தொல்லையில் இருந்தும் காக்கும்.

இதேபோல் கற்றாழையில் இருக்கும் ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் பழுதான தலைமுடி வேர்களை புதுப்பிக்கும். தலைமுடியில் இருக்கும் அதிகபட்ச எண்ணெய் பசையை கண்ட்ரோல் ஆக்குவதுடன், த;லைமுடியின் வறட்சியையும் போக்கும். தலைமுடிக்கு இது இயற்கையான கண்டிசனர்.

கற்றாழையின் முள், தோளை நீக்கி ஜெல்லை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். இதேபோல் சின்ன வெங்காயத்தின் தோளை நீக்க வேண்டும். இப்போது இது இரண்டையில் மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். அரைக்கும் போது தண்ணீர் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது இதை வடிகட்ட வேண்டும். இப்போது இதை ஒரு துணியில் எடுத்து தலைமுடியின் வேரில் படுவது போல் தடவ வேண்டும்.

தலைமுழுவதும் இப்படி செய்ய வேண்டும். தொடர்ந்து வெது,வெதுப்பான தண்ணீரில் டவலை நனைத்து தலைமுடியை சுற்றிவிட வேண்டும். ஒரு மணி நேரம் கழித்து முடியை கழுவிப் பாருங்கள். நீங்களே மாற்றத்தை உணர்வீர்கள்.

You may have missed