அம்மன் படத்தில் நடித்த குழந்தை.. தற்போது எப்படி இருக்காங்க பாருங்க…

தமிழ்த்திரைப்படங்களில் நடிகர், நடிகைகளுக்கு இணையாக குழந்தை நட்சத்திரங்களாக கவனம் குவித்தவர்கள் அதிகம். நடிகர் சிம்பு, சின்னத்திரை புகழ் நீலிமா, நடிகை மீனா உள்பட பலரும் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகம் ஆனவர்கள் தான்.

ஒருசில படங்களிலேயே நடித்திருந்தாலும் சில குழந்தை நட்சத்திரங்கள் நச்சென ரீச் ஆகிவிடுவார்கள். அந்த வகையில் 1995 ஆம் ஆண்டு தெலுங்கில் அம்மொரு என்னும் படம் மெகா ஹிட் ஆனது. இந்தப்படம் அம்மன் என்னும் பெயரில் தமிழில் எடுக்கப்பட்டு மெகா கிட் ஆனது. இதில் நடிகர் சுரேஷ், செளந்தர்யா உள்பட பலரும் நடித்தனர். இதில் நெகட்டிவ் ரோல் செய்த வடிவுக்கரசியின் கேரக்டர் நன்கு ரீச் ஆனது. இதில் அம்மன் ரோலில் நடிகை ரம்யா கிருஷ்ணன் அசத்தினார். இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாகநடித்து அசத்தியவர் சுனைனா.

இவர் வெகு யதார்த்த நடிப்பில் அசத்தினார். இப்போது பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்ட சுனைனா, திருமணம் முடிந்து குழந்தைகளுக்கும் தாய் ஆகிவிட்டார். இடை, இடையே சின்ன, சின்ன படங்களிலும், டிவி நிகழ்ச்சியிலும் மட்டும் தலைகாட்டும் சுனைனாவுக்கு இப்போது 32 வயது. தெலுங்கில் இருபதுக்கும் அதிகமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் சுனைனா உடல் எடை கூடி இப்போது அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டார்.
அம்மனாக நாம் பார்த்த சுனைனா இப்போது அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அடடே அந்த குழந்தையா இது? என ஆச்சர்யத்தோடு பகிர்ந்துவருகின்றனர்.
