ஊதுகொல்லி.. அடடே தமிழ் மரபில் இப்படியொரு தற்காப்பு ஆயுதமா? வியக்க வைத்த தமிழ் ஆசான்..!

இந்த உலகில் தற்காப்பு கலை என்பது மிகவும் முக்கியமானதாக இப்போது இருக்கிறது. அதிலும் பெண் குழந்தைகள் இன்றைய காலத்தில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். அதனால் அவர்களுக்கு தற்காப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனாலேயே பல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே தற்காப்புக்கலையைக் கற்றுக்கொடுக்கின்றனர்.

என்ன தான் கராத்தே, குங்க்பூ என கற்றுக்கொடுத்தாலும் நம் பாரம்பர்யக் கலைகளுக்கு இருக்கும் மவுசே தனிதான். அதிலும் சிலம்பம் உள்ளிட்ட பாரம்பர்யக் கலைகள் எப்போதும் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியூட்டுபவை. அந்தவகையில் நாமெல்லாம் மறந்துபோன நம் பாரம்பர்ய சிறப்புமிக்க ஊதுகொல்லி குறித்த வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அது என்ன ஊதுகொல்லி எனக் கேட்கிறீர்களா? ஒரு ஊதுகுழல் போல் ஒரு குச்சியை வைத்துக்கொண்டு எதிரே இருக்கும் எதிரியை மிகத்துல்லியமாக தாக்குவதுதான் ஊதுகொல்லி. இதோ இங்கே, பலூனை மாடலாக வைத்து சோதனை முயற்சியாக அது செய்யப்பட்டிருக்கும் காட்சியைப் பாருங்கள்.

You may have missed