ஏ.ஆர்.ரகுமான் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. விலையுயர்ந்த கார் முதல் பரந்து விரிந்த பங்களா வரை.. வெளிவந்த தகவல்கள்..!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் முதல் படமான ரோஜா படத்திலே இவருடைய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்ததால் இவர் முன்னணி இசையமைப்பளரக வலம் வந்தார். இன்றளவும் இவருடைய இசைக்கு பல மடங்கு ரசிகர்கள் அடிமை என்றே சொல்லலாம். தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையலாம் என அணைத்து மொழிகளிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

உலகளவில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவி சாராக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி என்றே சொல்லலாம். இந்நிலையில் இவர் சம்பாதித்த சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது இவர் எளிமையான குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும்

இவருடைய இசை பயணத்தின் மூலமாக லாஸ் ஏங்கெல்ஸில் உள்ள பரந்து விரிந்த தோட்டம் முதல் ஆடம்பர பங்களா முதல் விலையுயர்ந்த கார் அதுமட்டும் அல்லாமல் அவர் குவித்துள்ள செல்வம் மற்றும் சொத்துக்கள் மேலும் அவருடைய ஸ்டுடியோக்கள் அனைத்தின் மதிப்பு குறித்த தகவல்கள் தான் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது அவர் அவருடைய இசை பயணத்தால் சம்பாதித்த சொத்து மதிப்பு ரூ.1,728 கோடியை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.