ஏ.ஆர்.ரகுமான் திருமணத்திற்கு பெண் பார்க்க அம்மாவிடம் சொன்ன 3 கண்டிஷன்கள்… வெளிவந்த தகவல்கள்..!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் கம்ப்யூட்டர் இன்ஜினீயர் ஆக வேண்டும் என்று ஆசை கொண்டிருந்தாராம்.இவருக்கு இசை மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தன்னுடைய 15 வயதிலேயே பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு இசைப்பயணத்தை ஆரம்பிக்க தயாராகி விட்டார். இவருடைய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்ததால் இவர் முன்னணி இசையமைப்பளரக வலம் வந்தார். இன்றளவும் இவருடைய இசைக்கு பல மடங்கு ரசிகர்கள் அடிமை என்றே சொல்லலாம்.

இசைப்புயல் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையலாம் என அணைத்து மொழிகளிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். உலகளவில் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர் என்றே சொல்லலாம். சினிமாவில் அறிமுகம் ஆகி 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆன பின்னரும் இன்றளவும் இவர் பிஸியான இசையமைப்பாளராக தான் வலம் வருகிறார். மேலும் இவர் இரண்டு ஆஸ்கருக்கு சொந்தமானவர் என்றே சொல்லலாம்.இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவி சாராக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி என்றே சொல்லலாம்.

இந்நிலையில் இவர் திருமணம் செய்வதற்கு முன்பு அவருடைய அம்மாவிடம் பெண் பார்க்க சொல்லி 3 கண்டிஷன்ஸ் போட்டாராம் அது என்ன என்பது தான் தற்போது வைரல் ஆகிட்டு வருகிறது. அதாவது முதல் கண்டிசன் பெண் படித்திருக்க வேண்டுமாம். இரண்டாவது இசை பற்றி கொஞ்சமாவது தெரிந்து இருக்க வேண்டும் மற்றும் அழகா இருக்கபி வேண்டும் என்பதாம் மூன்றாவது நன்கு மரியாதை தெரிந்த பெண்ணாக இருக்க வேண்டும் அடுத்தவர்களை மதிக்க தெரிந்திருக்க வேண்டும் என்று எல்லாம் சொல்லிருந்தாராம். இந்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.