இதுக்கு மேல என்னால இங்க இருக்க முடியாது… பிக் பாஸை விட்டு வெளியேறிய பவா செல்லதுரை..?

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோ ஆன பிக் பாஸ் 7 தற்போது ட்ரெண்டிங் நம்பர் 1 ஷோவாக மக்கள் மத்தியில் இருக்கிறது . அதில் ஒரு போட்டியாளராக இருப்பவர்தான் பிரபல எழுத்தாளர் மற்றும் கதை ஆசிரியரான பவா செல்லதுரை.

போன வாரம் எலிமினேஷனில் அனன்யா அவர்கள் வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்த வார கேப்டனாக சரவணா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து ஸ்மால் ஹவுஸ் செல்லும் 6 போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்றது. அதில் சோம்பேறியாக இருப்பவர் என பவா செல்லதுரை கேப்டன் சரவணன் கூறினார். இதனைத் தொடர்ந்து பவா செல்லதுரை அவர் சற்று மனம் தொய்வாக காணப்பட்டார்.இதன் தொடர்ச்சியாகவே அவர் இரவு முழுதும் தூங்காமல் இருந்ததாலும் அவர் உடல்நிலை காரணமாகவும் வெளியேறியதாக தகவல் கசிகின்றன.

பவா செல்லதுரை அவர்கள் போட்டியை விட்டு விலகுவதாக பிக் பாஸ் இடம் பேசும் சில காட்சிகளும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது வைரல் காட்சிகள் கீழே..

You may have missed