BB8 இரண்டு வாரம் தங்கிய அர்னவ்க்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா…! வெளியான தகவல்கள்…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 கடந்த அக்டோபர் 6 ம் தேதி ஆரம்பித்த நிலையில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி களம் இறங்கியுள்ளார். மேலும் இதில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் பிக் பாஸ் வீட்டிற்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் நடித்து சர்ச்சை ஜோடிகளான அர்னவ் மற்றும் அன்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்களாக வந்தனர். விஜய் டிவி செல்லம்மா சீரியலில் நடித்த அர்னவ் மற்றும் சன் டிவியில் செவ்வந்தி சீரியலில் நடித்து கொண்டிருந்த திவ்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்கள் இருவருக்கும் நடுவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்தனர்.

மேலும் அர்னவ்க்கும் செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதாக்கும் தொடர்பு இருப்பதாகவும் அர்னவ் மீது திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் அர்னவ் மற்றும் அன்ஷிதா ஜோடியாக பிக் பாஸ் வீட்டிற்க்குள் என்ட்ரி கொடுத்திருப்பது பெரும் சர்ச்சையாகவும் கேலியும் கிண்டலுமாக நெட்டிசென்கள் கலாய்த்து வந்தார்கள். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் முதல் எலிமினேட் போட்டியாளராக ரவீந்தர் எலிமினேட் ஆனார். இந்நிலையில் இரண்டாவது வாரம் எலிமினேட் ஆவதற்கு 10 போட்டியாளர்கள் பெயர் பட்டியலில் இருந்தது. அதில் சர்ச்சை ஜோடிகளில் ஒருவரான அர்னவ் எலிமினேட் செய்யப்பட்டார். இதற்கான காரணம் அர்னவ் அவரது முன்னாள் மனைவி திவ்யா மற்றும் அன்ஷிதா மூவரும் கான்பெரன்ஸ் காலில் பேசிய ஆடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதனை பார்த்த ரசிகர்கள் அர்னவ்க்கு ஆதரவு தராமல் ஒட்டு கம்மியாக போடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வெளியில் வந்த அர்னவ் பெண்கள் அணி அழகாக விளையாடுவதாகவும். ஆண்கள் அணி ஒருவர்க்கு ஒருவர் ஜல்ரா போடுவதாகவும் பேசினார். இதனால் கடுப்பான விஜய் சேதுபதி அர்னவ்க்கு பல அட்வைஸ்களை கூறி வெளியில் அனுப்பினார். இந்நிலையில் அர்னவ் பிக் பாஸ் வீட்டில் ஒரு நாள் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்ற தகவல் வந்துள்ளது. அதாவது ஒரு நாளைக்க்கு 20 முதல் 25 ஆயிரம் வரை சம்பளம் வாங்கியதாகவும் மொத்தம் 2.8 முதல் 3.5 வரை சம்பளம் வாங்கியகியதாகவும் உத்தேசமுறையில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

You may have missed