நீண்ட நாள் காதலியை திருமணம் செய்தார் பிக் பாஸ் பிரதீப் அந்தோணி… வைரலாகும் அசத்தலான திருமண போட்டோஸ்கள்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சீசன்ல் கலந்து கொண்டு பிரபலம் ஆனவர் டான் பிரதீப் அந்தோணி. இந்த நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றார். மேலும் இந்த நிகழ்ச்சியில் இவர் ரெட் கார்டு கொடுத்து வெளியில் அனுப்பப்பட்டார். இந்த நிகழ்ச்சியில் இவர் தான் டைட்டில் வின் பண்ணுவார் என எல்லாரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென வெளியில் அனுப்பப்பட்டார். தற்போது அவர் பட வைப்புகளுக்காகவும் காத்து கொண்டிருக்கிறார்.

மேலும்கடந்த சீசன்ல் போட்டியாளர்களாக கலந்து கொண்ட மாயா, பூர்ணிமா, ஜோவிகா ஆகியோர் ப்ரதீபால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்ல சர்ச்சைகாலால் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில் இவரின் ரசிகர்கள் பலருக்கும் இந்த நிகழ்ச்சி மீது அதிருப்தி ஏற்பட்டது என சொல்லலாம. மேலும் இவர் இயக்குனர் ஆவதே என்னுடைய கனவு அதற்காகா தான் நான் போராடி வருகிறேன் எனவும் அதற்காக தான் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.


இந்நிலையில் இவர் நீண்ட நாளாக காதலித்து வந்த பூஜா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணத்தில் இவர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

You may have missed