வாய்யில்லா ஜீவனின் தாகத்தை போக்க வள்ளல்லாய் வந்தவர்… நாய் குட்டிக்கு உதவி செய்து இணையத்தை கலக்கிய சிறுவன்..!

நீர் இன்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு…..உலகில் 71/-நீரினால் சூழப்பட்டுள்ளது. அவற்றில் மனிதர்கள் 60/-மேலாக விவசாயத்திற்கு உபயோக்கிறார்கள். பண்டைய காலங்களில் நீரின் முக்கியத்துவத்தை அறிந்த அரசர்கள் நீர் நிலைகளை மக்களுக்காவும், விவசாயத்திற்க்காகவும் உருவாக்கினார்கள். கிராமங்களை சுற்றி அணைகள், கிணறு, குளங்கள், கண்மாய், சிறிய ஓடை போன்ற நீர் நிலைகளை உருவாக்கி வைத்ததன் மூலம் இன்றும் அன்றாடம் மக்கள் இவற்றில் இருந்து பயன் பெற்று வருகின்றனர். தமிழர்களின் நீர் மேலாண்மைக்கு தக்க சான்றாக விளங்குவது காவிரி கல்லணை ஆகும். காவிரி ஆற்றில் மழை காலங்களின் போது நீர் வீணாக ஆற்றில் பாய்ந்தோடி கடலில் கலக்கும். காலநிலை மாற்றம் ஏற்படும் போது மக்கள் நீர் இன்றி வருந்துவார்கள், அதனை போக்க எண்ணிய அரசர் கரிகால் சோழன் காவிரி கல்லணையை கட்டினார். இதன் மூலம் நீர் வீணாக கடலில் கலப்பது தடுக்கப்படும். கோடை காலங்களிலும், விவசாய தேவைகளுக்கும் மக்கள் இவற்றின் மூலம் பயன் அடைந்தனர். இவ்வாறு தண்ணீரை சேகரித்து முப்போகம் விளைவித்தார்கள் முன்னோர்கள்.

தண்ணீரில் முக்கியத்துவத்தை வறண்ட பாலைவனத்தில் அறியலாம்…..தாக்கம் தீர்க்க உதவும் ஒவ்வொரு சொட்டும் நீரின் மேன்மை அப்போது உணர்த்தும். மக்களிடம் தண்ணீரின் முக்கியத்துவத்தை பற்றிய விழிப்புணர்வு செய்திகள் பல கிடைத்தாலும், நாகரிக மோகத்தால் தண்ணீரை பாட்டிலில் அடைத்து வைத்து குடிப்பது வழக்கமாகி போனது. 20 வருடங்களுக்கு முன்பு முன் பின் தெரியாத இடங்களுக்கு சென்றால் அருகில் இருக்கும் பெட்டி கடைகளில் தண்ணீர் கேட்டால் இலவசமாக அருந்த தருவார்கள். ஆனால் இப்போது நிலைமை நேர் கீழாக மாறியது. தண்ணீரை பாட்டிலில் அடைத்து வைத்து விற்பனை செய்யும் நிலைமைக்கு தள்ளப்பட்டுளோம். நாகரிக வளர்ச்சி ஒரு புறம் இருந்தாலும் இயற்கையாக கிடைக்கும் தண்ணீரையும் காசு கொடுத்து வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதே உண்மை.

தவித்த வாய்க்கு தண்ணீர் அருந்த கொடுப்பது புண்ணியம் என பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். மனிதர்கள் தாகம் எடுத்தால் காசு கொடுத்து கடைகளில் வாங்கி அருந்துவார்கள், இல்லை என்றால் அக்கம் பக்கத்தினரிடம் கேட்டு வாங்கி குடிப்பார்கள். வாயில்லா ஜீவன்கள் இந்த நிலைமையை எவ்வாறு சமாளிக்கும். தாகத்தில் தவித்த வாயில்லா ஜீவன் அடி பம்பில் தண்ணீர் அருந்த உட்கார சின்ன சிறு சிறுவன் வாயில்லா ஜீவனின் தாகத்தை அறிந்து பம்பினை அடித்து நாய்க்கு தண்ணீர் கொடுக்க முயற்சி செய்த சம்பவம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அந்த காணொலியை கீழே காணலாம்….