தன் பாட்டியிடம் செம க்யூட்டாக சண்டை செய்யும் குட்டி தேவதை.. எத்தனை முறை பார்த்தாலும் சிரிப்புதான் வரும்..

‘குழல் இனிது யாழ் இனிது என்பர் தன் மக்கள் மழலை சொல் கேளாதவர்’ என்கிறது பழமொழி. குழந்தைகள் செய்யும் எந்த ஒரு செயலுமே வெகுவாக கவனிக்க வைத்துவிடுகிறது. நம்மை மிகவும் ரசனைக்குரியதாகவும் அது மாற்றி விடுகிறது. அதனால் தான் குழந்தைகளின் வீடியோக்களும், வெள்ளந்தி குணமும் அவ்வப்போது இணையத்தில் டிரெண்டாகி விடுகிறது.

குழந்தைகளின் உலகமே குதூகலமானது. ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தால்கூட ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடு ஆகாது எனச் சொல்லும் அளவுக்கு குழந்தைகள் உற்சாகத்துள்ளல் போடுவார்கள். அதிலும் மூன்று வயதுவரை அவர்கள் செய்யும் செயல்கள் ஒவ்வொன்றும் மிகுந்த ரசனைக்குரியதாக இருக்கும். ‘அழகுக்குட்டி செல்லம் உன்னை அள்ளித்தூக்கும் போது..பிஞ்சு விரல்கள் மோதி’ எனத் தொடங்கும் பிரித்விராஜின் திரைப்பட பாடலில் குழந்தைகளின் அழுகை, சிரிப்பு என பல்வேறு கோணங்களையும் காட்சிப்படுத்தி இருப்பார்கள். அதைப் பார்த்தாலே நம்மையும் அறியாமல் புத்துணர்ச்சி வரும்.

இங்கே ஒரு குழந்தை செய்த செயல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. ஒரு குட்டிக்குழந்தை தன் பாட்டியுடன் செம க்யூட்டாக சண்டை போடுகிறது. தன் மழலை மொழி மாறாமல் அந்தக் குழந்தை பாட்டியுடன் சண்டை செய்ய, பாட்டியும் பதிலுக்கு செல்லக்குழந்தையோடு விளையாடும் நோக்கத்தில் சண்டை செய்கிறார். முதலில் பாட்டி தான் குழந்தையை சண்டைக்கு அழைத்தார். குழந்தையோ பதிலுக்கு வேற லெவலில் செம க்யூட்டாக சண்டை செய்கிறது. இதோ நீங்களே அதைப் பாருங்களேன்.

You may have missed