ஆளை பார்த்ததும் இருபது நொடியில் வீடு கட்டி ஒளிந்து கொள்ளும் நண்டு.. எவ்வளவு வேகம்னு பாருங்க..

இயற்கை அதிசயங்கள் பலவையும் தன்னகத்தே கொண்டது. என்னதான் இன்று விஞ்ஞானம் வளர்ந்து ஆர்க்கிடெச்சர் படித்தவர்கள் வித, விதமாக வீடு கட்டி அழகுப் பார்த்தாலும் இன்றும் இயற்கையாக சில உயிரிகள் தங்களுக்குத், தாங்களே கட்டிக் கொள்ளும் வீட்டுக்கு இணை எதுவும் இல்லை.

சிலந்தி அழகாக வலை போன்று பின்னி அதில் சொகுசாக குடியேறும். நத்தைக்கும், ஆமைக்கும் இயல்பிலேயே அதன் உடல் அமைப்பு ஓடுபோல் இருக்கும். இப்படி நிறைய சொல்லலாம். இங்கேயும் அப்படித்தான். நண்டு ஒன்று, கடற்கரை மணலில் தனக்குத்தானே வீடுகட்டிக் கொண்டு இருக்கிறது.

அதுவும் வெறும் 20 நொடியில் மிக நேர்த்தியாக கடலில் இருந்து மண் எடுத்துஇந்த நண்டு அழகாக தன்னைச் சுற்றி வீடுகட்டிக் கொள்கிறது. குறித்த அந்தக் காட்சி இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.