வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா..? இதை மட்டும் செய்யுங்க… காலத்துக்கும் இனி கரப்பான் பூச்சி தொல்லை இல்லை!

கரப்பான் பூச்சித் தொல்லை இல்லாத வீடுகளே இன்று இல்லை. வீட்டுக்கு, வீடு கரப்பான் பூச்சி அதிகமாக உள்ளது. அதை ஒழிக்க, கொல்ல மக்கள் கடும் சிரமங்களையும் சந்திக்கின்றனர்.

சில மருந்துகளை வாங்கி அடித்தாலும் கொஞ்ச நேரம் செத்ததுபோல் கிடந்துவிட்டு மீண்டும் எழுந்து போய்விடுமாம் கரப்பான் பூச்சி.கரப்பான் பூச்சி நம்மை விடவும் பத்துமடங்கு அணுக்கதிர் வீச்சை தாங்கக் கூடியது. கரப்பான் பூச்சியின் தலையை துண்டித்துவிட்டால்கூட உடம்பில் இருக்கும் நரம்பு மண்டலம் வாயிலாக மூச்சு விடும்.

சரி உணவே இல்லாத இடத்தில் போட்டால்கூட ஒருமாதம் வரை கரப்பான் பூச்சியால் வாழமுடியுமாம். தலை துண்டான பின்பு தண்ணீர் குடிக்க முடியாமல் தாகத்தில் தான் ஒருவாரத்துக்குப் பின்பு இறக்குமாம். 40 நிமிடங்கள் வரை கரப்பான் பூச்சி மூச்சுவிடாமல் இருக்கும். சிலநேரம் நாம் அடித்து மூலையில் போட்டால்கூட சிறிதுநேரம் கழித்து நாம் பார்க்காத போது ஊர்ந்து போய்விடும். சரி, இந்த கரப்பான் பூச்சி உங்கள் வீட்டுப்பக்கமே வராமல் செய்ய ஒரு சூப்பர் டிப்ஸ் இருக்கிறது.

அது என்ன தெரியுமா? ஒரு லிட்டர் வெந்நீர், பெரிய எலுமிச்சம் பழம் ஒன்று, பேக்கிங் சோடா 4 டீஸ்பூன் ஆகியவையே இதற்குப் போதும். முதலில் வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து பேக்கிங் சோடா சேர்த்து நன்றாகக் குலுக்கி எடுக்க வேண்டும். இந்தத் தண்ணீரை கொண்டு உங்கள் சமையல் மேடை, சிங்க், மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கழுவ வேண்டும்.

சில வீடுகளில் கரப்பான் பூச்சித் தொல்லை அதிகம் இருக்கும். அவர்கள் இதை மூன்று நேரமும் செய்ய வேண்டும். இப்படிச்செய்தால் கரப்பான் மட்டுமல்ல வேறு எந்த பூச்சித் தொந்தரவும் இருக்காது. இதேபோல் இளஞ்சூடான நீரில், வெள்ளை வினிகர் சம அளவு எடுத்து கலக்கவேண்டும். சமைத்து முடித்ததும் கேஸ் அடுப்பை இந்த கரைசல் உள்ள இடத்தில் விட்டு சுத்தம் செய்யவும். மிச்சக் கலவையை சிங்க் பகுதியில் ஊற்ற வேண்டும். இது குழாய்கள் மற்றும் வடிகால்களை கிருமி நீக்கம் செய்து கரப்பான் பூச்சியை வெளியேற்றும். இதையெல்லாம் நீங்களும் செய்து பாருங்களேன்.

You may have missed