இந்த குட்டிபாப்பா யாருன்னு தெரியுதா..? இப்போது பிரபல சின்னத்திரை நடிகை..!

சின்ன வயது புகைப்படங்கள் என்பது ஒவ்வொருவருக்கும் பேவரட் தானே? அதிலும் தங்களின் சின்ன வயது புகைப்படங்களை பலரும் பொக்கிஷமாக வைத்திருப்பார்கள்.

அதிலும் பிரபலங்களாக இருப்பவர்கள் இந்த கரோனா காலத்தில் ரொம்பவே ரிலாக்ஸ்டாக இருக்கிறார்கள். இவர்கள் தங்களின் சின்ன வயது புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிடுவது இப்போதெல்லாம் பேஷன் ஆகிவிட்டது. அந்த வகையில் பிரபல நிகழ்ச்சித் தொகுப்பாளினி ரம்யா வெளியிட்ட புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரம்யா நிகழ்ச்சித் தொகுப்பாளினியாக மட்டும் அல்லாது மொழி, மங்காத்தா, ஓகே கண்மணி, ஆடை படங்களிலும் நடித்து இருந்தார் . மொத்தத் திரைப்பிரியர்களும் கொண்டாட காத்திருக்கும் இளைய தளபதி விஜயின் மாஸ்டர் படத்திலும் நடித்திருக்கும் தொகுப்பாளினி ரம்யாவின் குழந்தைப் பருவ புகைப்படம் தான் அது!