இரவு தூங்க முடியாமல் அடிக்கடி விழிக்கிறீர்களா..? அப்படியானால் உங்கள் வயிற்றில் புழுக்கள் இருக்கலாம்.. இதோ அருமையான தீர்வு..!

எப்போதும் வயிறு அசெளரியமாக இருந்தாலும், இரவில் அடிக்கடி தூக்கத்தில் விழித்தாலும் உங்கள் வயிற்றில் அதிக அளவு புழுக்கல் இருக்கும் வாய்ப்பு அதிகம். இவர்களுக்கு அடிக்கடி வயிற்றுப்போக்கும் இருக்கும். இதனை நம் முன்னோர்கள் வழியில் இயற்கையான முறையிலேயே தீர்க்கலாம். அதுபற்றி இங்கே பார்ப்போம்.

கற்றாழை ஜெல்லை நீரில்போட்டு கொதிக்கவைத்து இறக்கி அந்த தண்ணீரை குடிக்க வேண்டும்.இதில் வயிற்றில் உள்ள புழுக்களை அழித்துவிடும். இதேபோல் தேங்காயும் குடலில் உள்ள புழுக்களை வெளியேற்றும். தேங்காயில் ஆண்டி பாராசிடிக் பண்பு உள்ளது.

தினசரி காலை உணவின் போது ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை சாப்பிடலாம். தேங்காடை சாப்பிட்ட மூன்று மணிநேரத்துக்குப் பின்னர், 375 மில்லி பாலில் 30 மில்லி விளக்கெண்ணெய் சேர்ந்து குடிக்க வேண்டும்.

இதேபோல் பூண்டும் உடலில் இருந்து நுண்ணுயிரிகளை நீக்க உதவும். குடலில் அதிகளவு புழுக்கள் இருந்தால் மலப்புழையில் கடும் அரிப்புவரும். அப்போது பூண்டு பற்களை அரைத்து, வேஸ்லின் சேர்த்து மலப்புழையை சுற்றி தடவினால் புழுக்கள் முட்டையிலேயே அழிந்துவிடும். இதேபோல் தினமும் இரண்டு பூண்டு சாப்பிடுவதன் மூலமும் புழுத்தொல்லையில் இருந்து பூரணமாக விடுபடலாம்

இதேபோல் மூங்கில் இலைகளும் குடல்புழுக்களை அழிப்ப்தில் முக்கியப்பங்கு வகிக்கும். மூங்கில் இலைகளை அரைத்து சாறு எடுத்தும் குடிக்கலாம். இப்படி செய்தால் குடல்புழுக்கள் வெளியேறும். வெள்ளைப்பூசணியின் விதைகளை நீரின் நன்றாகக் கழுவி, வெயிலில் காயவைத்து, அரைத்து பொடி செய்துகொள்ள வேண்டும். அந்த பொடியை தேங்காய்பாலில் கலந்து குடித்தால் நாடாப்புழு வெளியேறும்.

குடல்புழுக்களை கிரேப் ப்ரூட் விதை சாறும் அழிக்கும். மாதுளையின் மரப்பட்டை, இலை, தண்டு ஆகியவற்றில் ஏராளமான மருத்துவப்பண்புகள் உள்ளது. மாதுளையின் மரப்பட்டையில் புனிசின் என்னும் அல்கலாய்டு உள்ளது. இது வயிற்றில் உள்ள நாடாப்புழுக்களை வெளியேற்றும். இதேபோல் ஓமத்தில் தைமோல் உள்ளது. ஆயுர்வேதத்தில் வயிற்றுப்புழுக்களை அழிக்க ஓமவிதை வெல்லத்துடன் சேர்த்து கரைத்துக் கொடுப்பார்கள். மஞ்சளும், கிராம்பும் இதேபோல் குடல் புழுக்களை வெளியேற்றும். தினம் ஒரு கிராம்பை வாயில் போட்டு மென்றாலே குடல் புழுக்கள் ஓடுவிடும்.

இதையெல்லாம் முயற்சித்துப் பாருங்களேன்..

You may have missed