கண்ணாடி போட்ட இந்த சிறுமி யார் தெரிகிறதா..? தற்போது தமிழ் மற்றும் இந்திய சினிமாவை கலக்கும் நடிகை தான்..!

ஆட்டமா? தேரோட்டமா? பாடலுக்கு மன்சூர் அலிகானின் துப்பாக்கி முனையில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஆடி கவனிக்க வைத்தவர் ரம்யா கிருஷ்ணன். அதே இளமையையும், அழகையையும் ரம்யா கிருஷ்ணன் இன்னும் கூட தக்கவைத்திருப்பது ஆச்சர்யமான விஷயம் தான்!

ரம்யா கிருஷ்ணனை நீலாம்பரி, ராஜமாதா என்றெல்லாம் ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் இவர். படையப்பாவில் நீலாம்பரியாக வெகுவாக ஈர்த்தவர், நீண்ட இடைவெளிக்கு பின்பு ரம்யாகிருஷ்ணன் பாகுபலியால் பரவலாக கவனிக்கப்பட்டார். அதன் பின் மறுபடியும் சூப்பர் ஸ்டாருடன் ஜெயிலர் படத்தில் இணைந்தார்.

அந்தவகையில் இப்போது ரம்யாகிருஷ்ணன் பள்ளிக்காலத்தில் தான் கண்ணாடி சகிதம் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது இப்போது வைரலாகிவரும் நிலையில் இப்படி இருந்த ரம்யா கிருஷ்ணனா இப்போது இவ்வளவு அழகாக இருக்கிறார்? என ரசிகர்கள் பகிர்ந்துவருகின்றனர்.

pic1

pic2

You may have missed