எந்த நாளில் பிறந்தவர் எப்படி இருப்பார்கள்..? தெரிஞ்சுக்க இதை படிங்க…

ஜோதிட சாஷ்திரத்தை பொறுத்தவரை நாம் பிறந்தநாள் மிகவும் முக்கியமானது. காரணம் ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு தன்மை இருக்கும். அது குறித்து இதில் பார்க்கலாம்.

ஞாயிறு…

இவர்கள் எப்போதும் சிந்தனையில் சிறந்தவர்கள். கற்பனைத் திறனும், பழகும் விதமும் இவர்கள் இருக்கும் இடத்தில் மகிழ்ச்சியை உருவாக்கும். இவர்கள் தங்கள் ஆற்றலால் இருக்கும் இடத்தை பிரகாசம் ஆக்குவர். இவர்களுக்கு வாகனங்கள் வாங்குவது, செல்ல பிராணிகள் வளர்க்கும் யோகம் உண்டு.

திங்கள் கிழமை…

இவர்கள் இரக்க குணம் கொண்டவர்கள். இவர்கள் உனர்ச்சிமிக்க மனிதராகவும் இருப்பார்கள். குடும்பத்தின் மீது அதிகமான பாசம், பற்று கொண்டவராகவும், மற்றவர்களுக்கு உதவி செய்பவராகவும் இருப்பார்கள்.

செவ்வாய் கிழமை

இவர்கள் சண்டை போடுவதற்கு ஆகவே பிறந்தவர்கள். பிடிவாதம் கொண்ட இவர்கள் அதை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள். ஆற்றல்மிக்க இவர்கள் பொறுக்க மாட்டார்கள். இவர்கள் செவ்வாய்க் கிழமை கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.

புதன் கிழமை

இவர்கள் நன்றாக பேசக் கூடியவர்கள். அதேநேரம் அமைதி இவர்களிடம் இல்லை. அலட்சியமாக இருந்தாலும் இவர்கள் சோம்பேறி அல்ல.

வியாழக் கிழமை.

இவர்கள் நன்றாக பழகக்கூடியவர்களாகவும் வசீகரமான தோற்றம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு பொறாமை குணம் கூடுதல். எப்போதும் இவர்கள் உயர்ந்த சிந்தனை கொண்டவர்களாம்

வெள்ளிக் கிழமை.

இவர்கள் அன்பின் மீது அதீத நம்பிக்கை கொண்டவர்கள். வலிமையான பிணைப்பை தன்னை சுற்றி இருப்பவர்கள் உடன் ஏற்படுத்தி கொள்வார்கள். இவர்களின் ஒரே பிரச்னை அதிகமாக உணர்ச்சி வயப்படுவது..அதைத் தவிர்க்க வேண்டும்.

சனிக்கிழமை…

இவர்கள் பழைய ஆன்மாக்கள் என அழைக்கப்படுவார். எளிமையான இவர்கள் அனைத்து வேலைகளையும் பொறுமையாக தான் செய்வார்கள்.