வாடகை தாய் மூலம் பிறந்த குழந்தை… பிரசவத்துக்கு பின் வேணாமென உதறிய பெற்றோர்… காரணம் என்னவென தெரியுமா?

வாடகை தாயை ஏற்படுத்திக் கொண்டு குழந்தை பிறக்க ஆயுத்தமான தம்பதி ஒன்று குழந்தையை கண்ணால் பார்த்ததும், அப்படியே போட்டுவிட்டு சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

கருப்பையில் நீர்க்கட்டிகள், மூன்றுமுறை கருச்சிதைவு ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்த பெண்ணின் கணவர் தனது உயிரணு, மனைவியின் கருமுட்டை இரண்டையும் சேர்த்து செயற்கை முறையில் கருத்தரிக்க ஆஸ்பத்திரியை நாடினார். வாடகைத்தாய் மூலம் கர்ப்பமும் தரிக்கப்பட்டது. பத்துமாதங்களும் அந்த வாடகைத்தாயை கண்ணும், கருத்துமாகப் பார்த்துக் கொண்டனர். பிள்ளையும் பிறந்தது.

அந்த தம்பதிகள் நீலநிற கண்களையும், பழுப்பு நிற முடியையும் கொண்ட அமெரிக்கர்கள். ஆனால் பிறந்தகுழந்தையோ கருப்பு முடி, பழுப்பு நிறக்கண்களுடன் ஆசியக் குழந்தையாக இருந்தது. அதிர்ச்சியடைந்த அந்த ஆ டி,என்.ஏ சோதனைக்கு குழந்தையை உட்படுத்தினார். அப்போதுதான், மருத்துவமனையில் நடந்த குழப்பத்தால் யாரோ ஒருவரின் உயிரணு, கருமுட்டை இவர்கள் அமர்த்திய வாடகைத்தாய்க்கு செலுத்தப்பட்டது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தம்பதியினர் குழந்தையை பெற்றுக்கொள்ளாமலே சென்றுவிட்டனர். மருத்துவமனை தவறு செய்துவிட்ட நிலையில் ஆணாக நானும் வருந்துகிறேன். இருந்தும், நானும், என் மனைவியும் நீண்டகாலம் ஆசைப்பட்ட ஒரு விசயம், கண்முன்பு இருக்கும்நிலையில் நான் அதை வீணாக்க மாட்டேன் எனவும் பதிவிட்டுள்ளார். நீங்கள் அழைத்து வர விரும்பிய குழந்தையை வளர்க்கும் பொறுப்பு உங்களுடையதுதான் என அதில் இடுகை இட்டுள்ளனர் நெட்டிசன்கள். இந்த பதிவுக்கு 4000க்கும் அதிகமானோர் கமெண்ட் செய்துள்ளனர்.

You may have missed