இந்த மாதிரி அறிகுறிகள் இருக்கா..? பெருங்குடல் பாதிக்கப்பட்டிருக்கலாம்.. எச்சரிக்கை ரிப்போர்ட்…!
சிலருக்கு மலம் கழிக்கும் போது ரத்தம் அதனோடு கலந்து வரும். இது எப்போதாவது என்றால் பரவாயில்லை. உடல் உஷ்ணம் என எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அடிக்கடி இப்படி இருந்தால் உங்கள் பெருங்குடலை உடனே சோதனை செய்து பார்க்க வேண்டும்.
பெருங்குடல் நம் செரிமான அமைப்பின் கடைசிப் பகுதி. இது திடக்கழிவு பொருட்களை உடலில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்னதாக அதிலிருந்து தண்ணீரையும், உப்பையும் பிரித்தெடுக்கும். பெருங்குடலில் புண் வந்தால் பெருங்குடலின் உள்பக்க சுவர்களிலும், மலக்குடலின் உள்பக்க சுவற்றிலும் புண்களை ஏற்படுத்தும். இதன் காரணமாக பெருங்குடல் மற்றும் மலக்குடல் சிவப்பாக வீக்கத்தோடு இருப்பதோடு வலியையும் கடுமையாக உருவாக்கும்.
முதலில் லேசான வயிற்று வலியில் தான் இது ஆரம்பிக்கும். மலம் கழிக்கும்போது கடுமையான வேதனையைக் கொடுக்கும். இது ஆரம்பத்திலேயே சிகிட்சை எடுக்க வேண்டிய ஒன்று. இல்லாவிட்டால் உயிருக்கே உலை வைக்கும் அபாயமும் இதில் உண்டு. பெருங்குடலில் புண் இருந்தால் வயிறு பிடிபி, கடுமையான வயிற்று வலியும் இருக்கும்.
மலத்துவாரத்தில் கடும் வலியும், மலத்துடன் ரத்தக்கசிவும் இருக்கும். நாம் முக்கினாலும் மலம் உடனே வராது. உடல் எடை குறைதலும் பெருங்குடல் புண்ணிற்கான அறிகுறிதான். பெருங்குடல் புண் இருந்தால் இதனோடு காய்ச்சலும் சேர்ந்து எட்டிப் பார்க்கும். வயிற்றுப்போக்கும் இதன் ஒரு அம்சமே…இந்த அறிகுறிகள் எல்லாம் இருந்தால் உஷாரா இருங்க…