அம்மாவோடு ஏட்டிக்கு போட்டியாக க்யூட்டாக சண்டை போடும் குட்டி தேவதை… எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத காட்சி..!
குழந்தை ஒன்று தன் அம்மாவோடு சண்டை போடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அந்தக் குழந்தை செல்ல சண்டை போட்டாலும் செம க்யூட்டாக இருக்கிறது. இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
குழந்தைகள் விளையாடினால் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அது ரொம்பவே க்யூட்டாக இருக்கும். அதனாலேயே குழந்தைகளிடம் பெரியவர்கள் விளையாட்டுக்காக விளையாட்டு காட்டியும், அவர்களை கோபப்படுத்தியும் ரசிப்பார்கள். இங்கேயும் அப்படித்தான். ஒரு குழந்தையிடம் அவரது அம்மா விளையாட்டாக சண்டை போடுவது போல் கத்துகிறார். பதிலுக்கு அந்தக் குழந்தையும் தனக்குத் தெரிந்த மழலை மொழியில் பதிலுக்குப் பதில் கத்துகிறது.
தாய் அடிப்பது போல் செய்ய குழந்தையும் அப்படியே திருப்பி செய்கிறது. ஒருகட்டத்தில் தன் அப்பா செல்போனில் இதை வீடியோவாக எடுப்பதைத் தெரிந்துகொண்டு டாடி என அழைக்கிறது. கடைசியில் தன் அம்மாவின் தலையில் செல்லமாக முட்டி சமாதானம் ஆகிறது இந்த குட்டிக் குழந்தை. ஒன்றரை வயதே நிரம்பிய இந்த குழந்தையின் செய்கை செம ரசனையாக இருக்கிறது. இதோ நீங்களே இந்த வீடியோவில் பாருங்கள்.