திருமண மோதிரத்தை நான்காவது விரலில் அணிவது ஏன் தெரியுமா…? இது தான் காரணமாம்..

ஒவ்வொரு மனிதனது வாழ்விலும் மிக முக்கியமான திருப்புமுனை காலக்கட்டம் அவனது திருமணம் தான். அதனால்தான் மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் என முன்னோர்கள் சொன்னார்கள்.

இந்து மதச் சடங்கின்படி தாலி கட்டுவதே திருமணம் ஆகும். கிறிஸ்தவர்கள் மோதிரம் மாற்றிக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் எந்த மதத்தை சேர்ந்தவர்களும் நிச்சயதார்த்தத்தின் போது மோதிரம் மாற்றிக் கொள்ளும் பழக்கமும் இருக்கிறது. உலகம் முழுவதுமே திருமண மோதிரத்தை 4வது விரலில் தான் போட்டுக்கொள்கின்றனர். இடதுகையின் நான்காவது விரலில் மோதிரம் அணியும் இந்த வழக்கம் கிபி 1549ல் இருந்து தொடங்கியது.

துவக்கத்தில் வலதுகையில் அணியப்பட்ட இந்த திருமண மோதிரம் ஐரோப்பாவில் இருக்கும் ஆர்.சி சபையில் நடந்த கல்யாணத்தில் தான் இடதுக்கு மாறியது. அறிவியல் பெரும் வளர்ச்சிகளை எட்டியிருக்காத காலத்த்ல் நம் கையின் நான்காவது விரலில் இருந்து ஒரு நரம்பு, இதயத்துக்கு ஓடுவதாகக் கருதப்பட்டது. அதனாலும் இந்த பழக்கம் வந்திருக்கலாம். அதேபோல் நம் ஒவ்வொரு விரல்களும், ஒவ்வொரு உறவைப் பிரதிபலிப்பதாக சீனர்களிடம் ஒரு நம்பிக்கை உண்டு.

அதில் நம் வாழ்க்கைத்துணையை பிரதிபலிப்பது 4வது விரலே! சீன நம்பிக்கையின் படி சுண்டுவிரல் குழந்தைகளையும், கட்டை விரல் பெற்றோரையும், நடுவிரல் நம்மையும் பிரதிபலிக்கும்.

இதை சிம்பிளாக விளக்கிவிடலாம். உங்க இரண்டு கைகளைஉம் சேர்த்து இணைத்து வையுக்கள். நடுவிரலை மட்டும் கீழ்நோக்கி மடங்குங்கள். மீத விரல்கள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். இப்போது சுண்டுவிரலை அதாவது குழந்தைகளை பிரதிபலிக்கும் விரலை பிரிக்க முயற்சி செய்துபாருங்கள். இது ரொம்ப எளிதாக முடியும். அதனால் தான் குழந்தைகள் திருமணம் முடியும் வரை குறிப்பிட்ட காலம்வரை நம்முடன் இருப்பார்கள் என்கிறார்கள் இப்படி ஒவ்வொரு விரலையும் பிரிக்க முடியும். ஆனால் திருமண விரலை அதாவது வாழ்க்கைத் துணைக்காக நாம் மோதிரம் அனிவித்திருந்திருக்கும் விரலை அப்படி பிரிக்க முடியாது.

உலகுக்கே இன்று கரோனாவைக் கொடுத்திருக்கும் சீனாக்காரன் தான் திருமண நிகழ்வில் நான்காவது விரலில் மோதிரம் அணியும் பழக்கத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.

You may have missed