ரஞ்சிதமே, ரஞ்சிதமே பாடலுக்கு திருமண மேடையில் வேற லெவலில் ஆட்டம் போட்ட சிறுமி…
குழந்தைகள் எது செய்தாலும் அழகு, குழந்தைகள் முதன் முதலாக பள்ளி சென்று வரும்போது கல்வி கூடத்தில் கற்று கொடுக்கும் பாடல்களை அவர்கள் சாதாரணமாக விளையாடிக்கொண்டிருக்கும் போது பாடிக்கொண்டே இருப்பார்கள். நாம் இன்னொரு முறை பாடு என்றால் படமாட்டார்கள். ஆனால் அவர்களுக்கு தோன்றும் நேரத்தில் பாடிக்கொண்டோ, சொல்லிக்கொண்டோ இருப்பார்கள்.
அது போல் நடனம் ஆடுவதும் அப்படித்தான். மிக இயல்பாக தொலைக்காட்சியில் தோன்றும் பாட்டுகளில் வரும் நடனங்களை அப்படியே ஆடி கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு பிடித்த பாடல்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வேளையில் எங்கிருந்தாலும் ஒடி வந்து தொலைக்காட்சியின் அருகில் வந்து நடனம் ஆடி கொண்டிருப்பார்கள்.
அதுவும் தற்போது திருமண நிகழ்ச்சிகளில் குழந்தைகள் நடனம் ஆடுவது பேஷன் ஆகி வருகிறது திருமணத்தில் இளம் பெண்கள் ஆடுவதை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் தற்போது இந்த சிறுமி ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடலுக்கு வேற லெவலில் ஆட்டம் போட்டு அனைவரின் கவனத்தையும் பெற்று உள்ளார். நீங்களே பாருங்க அந்த சிறுமியின் நடனத்தை.வீடியோ இணைப்பு கீழே…