தினமும் காலை உணவாக மூன்று முட்டை சாப்பிட்டு பாருங்க… உங்கள் உடலில் மாற்றத்தை உணருங்கள்..
உணவே மருந்து என்பது நம் மூதாதையர்கள் நமக்கு காட்டிக் கொடுத்த உன்னத வைத்தியங்களில் ஒன்று. அதனால் தான் தமிழர்கள் ஆரோக்கிய உணவுக்கே முக்கியத்துவம் கொடுத்தனர். ஆனால் இன்று காலமாற்றம் என்னும் பெயரில் பீட்சா, பர்கர் என உள்ளே தள்ளி வருகிறோம். இந்த சூழ்நிலையில் தான் தினமும் காலை உணவாக வெறும் மூன்று முட்டைகளை மட்டுமே சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியமாகும் என்னும் தகவல் வெளியாகி உள்ளது.
முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம், மக்னீசியம், விட்டமின் ஏ, இ. மற்றும் பி.6 அதிகமாக உள்ளது. இவை நம் உடலில் தசை மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது.விட்டமின் டி, கால்சியம் சத்துக்கள் முட்டையில் அதிக அளவில் இருப்பதால் அவை நம் எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.
எடையை குறைக்க அதிக கலோரி நிறைந்த உணவுகளை முற்றாகத் தவிர்த்து டயட்டில் இருப்பவர்கள் தினமும் காலை உண்அவாக 3 முட்டை சாப்பிடுவதும், கூடவே லேசான உடற்பயிற்சி செய்வதும் உடலை சிக்கென்று ஆக்கும்.
முட்டையில் லூடின், ஸீக்ஸாக்தைன் ஆகிய கரோட்டினாய்டு பொருள்களும் அதிக அளவில் உள்ளது. இது நமது கண்களின் கருவிழி செயல் இழப்பு, கண்புரை நோய்களைத் தடுத்து கண்பாதுகாப்பு பணியையும் செய்கிறது. முட்டையில் புரோட்டீன் மற்றும் மற்ற அத்யாவசிய சத்துக்கள், குறைவான கலோரியும் உள்ளது. இதனைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் கேடு ஏற்படுத்தும் கெட்ட கொலஸ்டிரால் குறைந்து, உடலும் சிக்கென்று ஆகும்.
இந்த முட்டையில் உள்ள கோலைன் என்னும் பொருள் நரம்பு மண்டலம், இதய நரம்பு மண்டலத்தின் பிரச்னைகளையும் குறைக்கும்…அப்புறம் என்ன மக்களே உங்க வீட்டுலயும் முட்டை இருக்கு தானே? முயற்சி செஞ்சு பாருங்களேன்…