சின்னத்திரை பிரபலம் தீபா அக்காவா இது..? திருமணத்தின் போது எவ்வளவு ஸ்லிம்மா இருக்காங்க பாருங்க..

குக் வித் கோமாளி ப்ரோகிராமில் வந்து பேமஸ் ஆனவர் தீபா. இதற்கு முன்பு சன் டிவி, விஜய் டிவி உள்பட பல்வேறு சேனல்களில் முண்ணனி தொடர்களில் நடித்திருந்தாலும் தீபாவுக்கு குக் வித் கோமாளி ப்ரோகிராம் தான் மிகவும் நல்லபெயரை பெற்றுக் கொடுத்தது.

சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி அனைவரையும் வயறு குலுங்கச் சிரிக்கவும் வைத்தது. இதில் பங்கு பெற்ற சீரியல் நடிகை தீபாவின் வெள்ளந்தி சிரிப்பிற்குள் பெரும் சோகம் இருக்கிறது.

தீபாவுக்கு இரு ஆண் குழந்தைகள். இருவருமே குறையாக பிறந்துள்ளனர். அதில் ஒரு குழந்தைக்கு பிறவியிலேயே காது கேட்கவில்லையாம். அதேபோல் வாயும் பேச முடியவில்லையாம். அதனால் காது கேட்கும் மிஷின் போட்டு பயிற்சி கொடுத்து பேசவும், கேட்கவும் வைத்துள்ளனர். அதேபோல் அடுத்த மகனுக்கு இதயத்தில் பிறவியிலேயே பிரச்னை இருந்துள்ளது. இதுவரை அதற்காகவே இரண்டு ஆப்ரேசனும் செய்துள்ளார்களாம். தீபா, சீரியல் என்று இல்லாமல் மாயாண்டி குடும்பத்தினர், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

தீபா இப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் அன்புடன் குஷி, மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரையிலும் பங்குகொண்டு வருகிறார். இந்த சீசனில் அவர் தன் கணவரோடு கலந்துகொண்டார். இந்நிலையில் சீரியல் நடிகை, குக் வித் கோமாளி புகழ் தீபா தன் கண்வரோடு கல்யாண ஆல்பத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள், அடடே சின்னத்திரை நடிகை தீபாவா இது? இவ்வளவு ஒல்லியாக இருந்திருக்கிறாரே எனக் கமெண்ட் செய்துவருகின்றனர்.புகைப்பட இணைப்பு கீழே

pic1

pic2

pic3