மீன் சாப்பிட்ட பின் இதை சாப்பிட்டால் உடலுக்கு ஆபத்து… மறந்தும் கூட இதைச் சாப்பிட்டு விடாதீர்கள்!.

உலகெங்கிலும் இருக்கும் உணவுப் பிரியர்களை சைவம், அசைவம் என இரண்டாக வகைப்படுத்தலாம். கோழி, ஆடுவெல்லாம் விட அசைவ உணவில் தனிச்சிறப்பு வாய்ந்தது மீன் தான்!

அதிலும் பெரிய மீன்களை சாப்பிடுவதை விட நெத்திலி, மத்தி மீனில் ஏராளமான சத்துகள் இருக்கின்றன. இதில் சுவையும், ஆரோக்கியமும் கூடுதலாகும். நெத்திலி மீனில் பாலி அன் சாச்சுரேட்டட்பேட்டி அமிலம் அதிக அளவில் இருக்கிறது. இது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை கரைத்து இதயநோய் ஏற்படும் வாய்ப்பை குறைக்கும். இதில் புரோட்டீன் அதிக அளவில் இருப்பதால் செல்லுலார் மற்றும் இணைப்புத்திசுக்களின் வளர்ச்சிக்கும் துணை செய்யும். அதிகளவு புரதச்சத்து இருப்பதால் மீன் உணவுக்கு எப்போதுமே சந்தையில் நல்ல கிராக்கியும் உண்டு.

அதேநேரம் உணவுக் கலாச்சாரத்தில் சில உணவுகளோடு, சில உணவுகளை சேர்த்து சாப்பிடவே கூடாது. அதை ஆயுர்வேத மருத்துவமும் மிக அழகாக எடுத்துச் சொல்கிறது. அதன் படி, மீன் உணவினைச் சாப்பிட்ட பின்பு சில உணவுகளை மறந்தும் சாப்பிட்டுவிடக் கூடாது. மீன் சாப்பிடும்போது முள்ளங்கியை சாப்பிடவே கூடாது. அப்படி சாப்பிட்டால் அது உயிருக்கே ஆபத்தாகிவிடுமாம். துளசி சாப்பிட்டுவிட்டு மீன் சாப்பிட்டால் நுரையீரல் பிரச்னை எழலாம்.

இதற்குக் காரணம், மீனும், முள்ளங்கியும் ஒன்றுக்கு, ஒன்று எதிர் எதிர் குணங்களைக் கொண்டவை. அதேபோல் மீனுடன் சேர்த்து பசலைக்கீரையைச் சாப்பிடக் கூடாது. பொதுவாகவே பசலை கீரையோடு வேறு எந்த உணவைச் சாப்பிட்டாலும் வயிற்றுப்போக்கு ஏற்படும். இதேபோல் தேன் குடித்துவிட்டும் மீன் சாப்பிடக் கூடாது. இதனால் சுவாசப் பிரச்னை வரும். இனி இதையெல்லாம் பின்பற்றுவீர்கள் தானே?

You may have missed