சின்ன வெங்காயத்தில் இவ்வளவு பெரிய பலன்களா?

வெங்காயத்தில் சின்னது, பெரியது என இரண்டு வகை உண்டு. சின்ன வெங்காயம் பார்ப்பதற்கு வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம். ஆனால் அதன் பலன்கள் மிக அதிகம். அதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்..

ஜலதோசம், நெஞ்சு படபடப்பு உள்ளவர்கள் சின்னவெங்காயத்தை மென்று சாப்பிட்டு அதன் பின்னர் வெந்நீர் குடித்தால் உடல் சமநிலைக்கு வந்துவிடும் இதயநோயாளிகளுக்கு முதலுதவியாகவும் சின்ன வெங்காயம் இருக்கும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி நல்லெண்ணெய் விட்டு வதக்கிதொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தம் குறைந்து இதயம் சீராகும்.

மூலநோயால் அவதிப்படுபவர்கள் நீர் மோரில் சின்ன வெங்காயத்தை வெட்டிப் போட்டு குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். வெங்காயத்தில் குறைந்த அளவே கொழுப்பு உள்ளது. எனவே குண்டானவர்களும் இதைச் சாப்பிடலாம். சின்ன வெங்காயம் குடலை சுத்தப்படுத்துவதோடு ஜீரணத்தையும் தூண்டும்.

நான்கைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தை சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும். பித்த ஏப்பம் மறையும் தினம் மூன்று வெங்காயம் சாப்பிட்டு வந்தால் தொண்டை கரபரப்பு மறையும். சின்ன வெங்காயச்சாறுக்கு கொழுப்பை உடனே கரைக்கும் ஆற்றலும் உண்டு.

அப்புறமென்ன தினசரி சின்ன வெங்காயத்தையும் உங்க சாப்பாட்டில் சேர்த்துக்கங்க…