பெண்களுக்கு ரொம்ப பிடிச்ச இராசி எது தெரியுமா..? உங்களை பெண்களுக்கு பிடிக்குமான்னு தெரிஞ்சுக்க படிங்க…!

பள்ளி, கல்லூரிகளில் கால் எடுத்து வைத்ததுமே மாணவிகளை கவர வேண்டும். அவர்களின் கடைக்கண் பார்வை நம் மீது பட வேண்டும் என தவமிருக்கும் மாணவர்கள் அதிகம் பேர் இருக்கும் காலம் இது! பதின் பருவம் தான் என்று இல்லை. எந்த வயதிலும் எதிர்பாலினத்தவரை திரும்பிப் பார்க்க வைக்க ஆசை துடிப்பது இயற்கையானது தான்.

சிலருக்கு ‘’உனக்கு எங்கையோ மச்சம் இருக்கு”என கிராமத்தில் சொல்வதுபோல். வாலண்டியராக பெண்களே வந்து பேசுவதையும் பார்த்திருப்போம். இது எப்படி சாத்தியமாகிறது? இதற்கு காரணம் அவர்களின் ராசி தான். ஆம் இந்த நான்கு ராசியில் பிறந்தவர்களின் மீது, இயல்பாகவே பெண்களுக்கு ஒரு ஈர்ப்பு இருக்கும்.

அதுகுறித்து தெரிந்துகொள்ள மேலே படியுங்கள்…

மிதுனம்

இவர்கள் பொதுவாகவே அதிர்ஷ்டக்காரர்கள். இவர்கள் மெல்லிய குணமும், காதல் உணர்வும் கொண்டவர்கள். பெண்களிடம் பேசுவதிலும் இவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள். இவர்களின் பெண்களின் மன ஓட்டத்தையும் மிக எளிதாக புரிந்து செயல்படுவதில் வல்லவர்கள். இவர்களை திருமணம் செய்யும் பெண்கள் அதிர்ஷ்டசாலிகள் தான் என்றாலும், அவர்கள் கொஞ்சம் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும்.

சிம்மம்

இவர்கள் உறவுக்கு மரியாதை செய்பவர்கள். காதல் உணர்வு எப்போதும் இவர்களிடம் ததும்பும். செல்வாக்கு உடையவர்களாகவும் இருக்கும் இவர்களிடம் பழக, பெண்கள் கூச்சப்பட மாட்டார்கள். நட்புக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இவர்களது மனதில் உள்ளதை அவ்வளவு எளிதில் யாரும் புரிந்துகொள்ள முடியாது. முதல் சந்திப்பிலேயே பெண்களை ஈர்க்கும் குணம் இவர்களுக்கு உண்டு. இவர்களிடம் குடிகொண்டிருக்கும் நல்ல பழக்கவழக்கங்களே பெண்களை இவர்களை நோக்கித் திருப்பும்.

துலாம்

வித்யாசம், விசித்திரம் இரண்டும் சேர்ந்த கலவையே இவர்கள். அழகான பெண்கள் இவர்களிடம் ஈர்க்கப்படுவார்கள். இவர்களின் வாழ்க்கைத் துணை அழகு, அன்பு, என கலவையாய் நல்மனநிலையை உணர்வார்கள். கூச்ச சுபாவம், கோபம் என சில குணங்களில் இவர்களிடம் எதிர்மறையாய் இருந்தாலும், ஒரு பெண் கொஞ்ச நேரம் பழகிவிட்டாலே இவர்களை மிஸ் செய்யக் கூடாது என எண்ண வைத்து விடுவார்கள்.

மகரம்..

இவர்கள் பொலிவான தோற்றம் கொண்டவர்கள். தோற்றத்திலேயே பெண்களை ஈர்த்துவிடுவார்கள். எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பது இவர்களின் ப்ளஸ். ஆளுமைத்திறன், தனித்தன்மையால் சுறு,சுறுப்புடன் இருக்கும் இவர்களையும் பெண்களுக்கு பிடிக்கும்.

அப்போ மற்ற எட்டு ராசிக்காரர்களும் அம்போ தானா என்கிறீர்களா? இதையெல்லாம் மிஞ்சிய வாய் சாமர்த்தியம் இருந்தால் நீங்களும் ஹீரோ தான் பாஸ்!

You may have missed