தூக்கத்தில் இறந்துபோனவர்கள் கனவில் வருகிறீர்களா..? அதற்க்கு இதுதான் அர்த்தம்..!

சிலருக்கு தூக்கத்தில் இறந்து போனவர்கள் அடிக்கடி வருவதுண்டு. அப்படி வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அது என்ன எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தூக்கத்தில் வருவதுதான் கனவு என பலரும் நினைக்கிறோம். ஆனால் அதையெல்லாம் தாண்டி நம் அழ்மனது நம்மைத் தொடர்புகொள்ள முயற்சிப்பதே கனவு ஆகும். அதில் சில புரிதல்கள் உள்ளது. நம் கனவில் தோன்றும் இறந்தவர்களின் ஆத்மா சக்தி நிறைந்தவை. நாம் தூங்காமல் விழித்துக்கொண்டு இருக்கும்போது நமது கண், காது. மூக்கு,வாய், உடம்பு ஆகிய 5 புலன்களும் இயங்கிக் கொண்டே இருக்கும். அதனால் இந்த சக்தியை அப்போது உணரமுடியாது.

அதேபோல் நாம் விழித்திருக்கும்போது நம் மனது எதையாவது சிந்தித்துக் கொண்டே இருக்கும். இதனால்தான் கனவில் மட்டுமே ஆன்மாக்கள் வருகிறது. பொதுவாகவே இறந்தவர்கள் உயிருடன் இருந்தபோது, அவருக்கு நியாயமாக நாம் செய்யவேண்டியதை செய்யவில்லை என நாம் வருத்தப்பட்டுக் கொண்டே இருந்தாலும் கனவு வரும்.

சில நேரம் சிலரது இறப்பால் நாம் அதிக பதட்டத்துக்கு உள்ளாகி இருந்தாலும் கனவுவரும். இதேபோல் இறந்தவர்கள் தங்கள் சந்ததியைத் தொடர்புகொள்ள முயன்றாலும் கனவுவரும். உங்கள் உதவியோடு வேறு ஒருவருக்கு உதவவோ, அல்லது பலிவாங்கவோ ஆன்மா நினைத்தாலும் கனவுவரும்.

அதுவே வயோதிகர் ஒருவர் உங்கள் வீட்டில் இருந்து அவர் இறந்து உங்கள்கனவில் வந்தால் உங்கல் சந்ததியைப் காப்பாற்ற அவர் துடிப்பதாக அர்த்தம்.ஆகையால், இறந்தவர் கனவில் வந்தால் பயப்பட மட்டுமே செய்யாதீர்கள். யோசியுங்கள். காரணத்தைத் தேடுங்கள்.

You may have missed