டைப்ரைட்டர் மிஷின் மாதிரி இருக்கே… இப்படி ஒரு இசைக் கருவியா..? பல லட்சம் பேர் வியந்து பார்த்த காட்சி..!

இசைக்கு மயங்காதவர் யாருமே இல்லை எனச் சொல்லிவிடலாம். இசையை ரசிக்காதவர்களும் யாருமே இருக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன் படம் எடுத்து ஆடும் நல்ல பாம்பு கூட மகுடி இசைக்கு பெட்டிப் பாம்பாக அடங்கி விடுவதைப் பார்த்திருப்போம். அந்தவகையில் மனித வாழ்வோடும் இசை இரண்டறக் கலந்த ஒன்றுதான்!

இன்றும், நல்ல இசையுடன் கூடிய பாடலோடு தூங்கச் செல்பவர்களே அதிகம். அந்த அளவுக்கு இசைக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு. பொதுவாகவே இசையைப் பொறுத்தவரை அது மேற்கத்திய இசையோ, நம் பாரம்பர்ய இசையோ அதற்கான கருவிகள் நம்மோடு பரிச்சயம் ஆகியிருக்கும். ஆனால் இங்கே நடந்த ஒரு இசைக் கச்சேரியில் நாம் இதுவரை பார்த்துப் பழகாத கருவி ஒன்றும் இருந்தது.

பார்க்கவே, ஏதோ டைப் ரைட்டிங் மிஷின் போல இருக்கிறது அந்தக் கருவி. அதில் செம க்யூட்டாக ஒரு சின்னப் பெண் இசைக்கிறார். அது நம்மையே மெய் மறக்கச் செய்துவிடுகிறது. அதிலும் இணையத்தில் அந்த காட்சியை இதுவரை 3 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இதோ நீங்களே பாருங்களேன் அதை!…

You may have missed