உண்மையான பக்தியின் வெளிப்பாடு இதுதான்… மலையில் முட்டிபோட்டு பெண் பக்தை செய்ததை பாருங்க..

சாமியார்களின் ஆன்மிக போதனைகளைக் கேட்கவும், அவர்களிடன் தரிசனத்தைப் பார்க்கவும் எப்போதுமே பக்தகோடிகள் காத்திருப்பார்கள். அந்தவகையில் இப்போது இணையத்தில் ஒரு பெண் சாமியாரின் வீடியோ வைரல் ஆகிவருகிறது.

ஏற்கனவே சில மாதங்களுக்கு ம்ன்பு சாமியாக தன்னை பாவித்து அது போல் அலங்காரம் செய்தவர், தன் தலைக்கு மேல் சாமி விக்கிரகம் ஒன்றையும் தூக்கி வைத்தார். அது கீழே விழாத நிலையில் அவர் ருத்ர தாண்டவம் ஆடினார். ஒரு கையில் அரிவாள், இன்னொரு கையில் கத்தி என வைத்துக்கொண்டு ருத்ர தாண்டவம் ஆடுகிறார். கீழே பக்தர் தரையில் படுத்துக்கொள்ள அவர் மேல் ஏறி நின்று பத்ரகாளி வதம் செய்யும் காட்சியைக் கண்முன்பே கொண்டு வந்து நிறுத்தினார்.

இவரை எல்லம்மா என்னும்பெயரில் ஆந்திராவில் பக்தர்கள் கொண்டாடி வருகின்றனர். இப்போது அவர் சாமி விக்கிரகம் ஒன்றையும் தூக்கிக்கொண்டு சரியான பாதை வசதியே இல்லாத மலைப் பகுதியில் முட்டு போட்டே நடந்து மலையேறுகிறார். ஒருகட்டத்தில் முழுக்க பாதை இல்லாத பகுதி வந்ததும், எவ்வித பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல் அவரே மலையைப் பிடித்துத் தொங்கிக்கொண்டு மேலே ஏறிச் செல்கிறார். மலை உச்சிக்குப் போய் முறையாக பூஜைகளும் செய்கிறார். இதைப் பார்க்கும் அவரது பக்தகோடிகள் அவரத் பக்தி உணர்வைப் பார்த்து சிலிர்த்துப் போகிறார்கள். குறித்த இந்த வீடியோவை இணையத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் பார்த்துள்ளனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.