உயிருக்கே உலைவைக்கும் சாப்பாட்டுப் பாத்திரம்… மறந்தும் கூட இதில் சமைச்சு சாப்பிட்டுறாதீங்க..!

உணவே மருந்து என்பது பழமொழி. நம் மனித உடலின் மொத்த ஆரோக்கியமும் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் தான் இருக்கிறது. அதனால் தான் இன்று பலரும் விழிப்புணர்வு அடைந்து இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்பட்ட உணவுகளை தேடிப்பிடித்து வாங்குகின்றனர்.

இப்படி நாம் சாப்பிடும் உணவிலும், விளைவிக்கப்பட்டு வாங்கும் காய்கறியிலும் செலுத்தும் அக்கறையில் துளி அளவுகூட, சமைக்கும் பாத்திரத்தில் செலுத்தவில்லை. அதனால் என்ன என்கிறீர்களா? சில பாத்திரங்கள் நம் உயிருக்கே உலை வைத்துவிடும்.

பொதுவாக சமைப்பதற்கு செம்பு பாத்திரம் நல்லது. இதற்கு உணவின் வெப்பத்தை நீண்டநேரம் தக்கவைக்கும் குணமுண்டு. அதேநேரம் அதிக அளவு உப்பு சேர்க்கும் உணவுகளை செம்பு பாத்திரத்தில் சமைக்காமல் இருப்பது நல்லது. காரணம் உப்பில் இருக்கும் அயோடின் தாமிரத்துடன் எளிதில் வினைபுரிந்துவிடும். இதனால் அதிக செம்பு துகள்கள் வெளியிடும் வாய்ப்பும் உள்ளது.

அலுமினிய பாத்திரத்தின் பிளஸ்_மைனஸ்..

சமையலுக்கு அலுமினிய பாத்திரமும் ஏற்றதே. சமைக்கவும், பரிமாறவும் இது ஏற்றது. இதன் மைனஸ் என்னவென்றால், அலுமினியப்பாத்திரம் விரைவில் சூடாகி அமிலத்துவம் வாய்ந்த காய்கறிகளுடன் வினைபுரியும். இந்த வேதியியல் வினை ஆரோக்கியமான உணவை அலுமினிய பாத்திரத்தில் சாப்பிட்டாலும், நேயெதிர்ப்பு மண்டலத்தின்மீது பெரும் பாதிப்பை உருவாக்கும்.

வெண்கல பாத்திரம்..

முன்னோர்கள் இதில் சமைப்பார்கள். ஆனால் இன்றைய தலைமுறைக்கு இதை தூக்குவதே சவாலான வேலை. இதில் சமைப்பது ஆரோக்கியம் அல்ல. உப்பு, அமில உணவுகளுடன் எளிதில் வினைபுரியும் இதை தவிர்ப்பது நல்லது.

ஸ்டெயின்லெஸ் ஏற்றதா?

உலகளவில் உணவு சமைக்க ஸ்டெயின்லெஸ் அதிகம் பயன்படுகிறது. இந்த துருப்பிடிக்காத பாத்திரம் முழுக்க உலோக அலாய். அதாவது குரோமியம், நிக்கல், சிலிக்கான், கார்பன் ஆகியவற்றின் கலவை, இவை அமில உணவுடன் வினைபுரியாது. வாங்கும்போது மட்டும் ஒரிஜினல் தரத்தை தேர்வு செய்து வாங்கிவிட்டால் இது மிகவும் நல்லது.

இரும்பே சிறப்பு…

இரும்பு பாத்திரம் தான் சமைக்க மிகவும் சிறந்தது. அது சமைக்கும் போது இயற்கையான இரும்பை வெளிவிடும். இது வெளியிடும் பொருள்கள் கருவில் வளரும் குழந்தைக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும். உடல் செயல்பாட்டுக்கும் கை கொடுக்கும்.

இனி பாத்திரம் வாங்க போகும் போது, பார்த்து வாங்குங்க…

You may have missed