இப்படி ஒரு அலாரம் இருந்தா ஒரு பய நிம்மதியா தூங்க முடியாது.. தூங்கிக்கொண்டிருந்த நபரிடம் சென்று சேவல் செய்த வேலையைப் பாருங்க…!
நாம் பொதுவாகவே குழந்தைகள் மட்டுமே ரசனையோடு விளையாடுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் ரசனை என்பது மனிதர்களுக்கு மட்டுமே உரித்தானது இல்லை. சில நேரங்களில் மிருகங்கள் உள்ளிட்ட பிற உயிரினங்களுக்கும் அந்தத் தன்மை அதிகமாக இருக்கும். இங்கேயும் அப்படித்தான் ஒரு சேவலின் ரசனைப்பூர்வமான லொள்ளு இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.
வீட்டில் ஒருவர் கோழி, சேவல்களை வளர்த்து வந்தார். அதில் ஒரே ஒரு சேவல் மட்டும் ரொம்பவே குசும்பு பிடித்தது. பொதுவாகவே கோழிக்கு ஒரு தன்மை உண்டு. பொழுது விடிந்ததும் கொக்கரக்கோ என பெருங்குரல் எழுப்பும். இன்றைக்கெல்லாம் தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்ள நாம் செல்போன்களில் அலாரம் வைத்துக் கொள்கிறோம். அதற்கும் முன்பு டைம் பிஸ்களில் அலாரம் வைத்து மாணவர்கள் விழித்து படித்துக் கொண்டிருந்தனர். ஆனால் இதற்கெல்லாம் அப்பாற்பட்டு, சேவல் கொக்கரக்கோ என கத்தி முழிப்பவர்கள் இன்னும் கிராமங்களில் இருக்கிறார்கள்.
இங்கேயும் அப்படித்தான். ஒருவர் தன் வீட்டில் சேவல் வளர்த்துவந்தார். அவர் நன்கு விடிந்தது கூடத் தெரியாமல் பெட்ஷீட்டை இழுத்துப் போர்த்தி தூங்கிக் கொண்டு இருந்தார். உடனே அவர் வளர்த்த சேவல் நேரே அவரது அருகில்போய் பெட்சீட்டுக்குள் இருக்கும் அவரது காது பக்கமாக கொக்கரக்கோ என கத்தியது. இருந்தாலும் இந்த சேவலுக்கு லொள்ளு ஜாஸ்தி தான் இணையத்தில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர்.
"அலாரம், ஹோம் சர்விஸ்.. "🐔 pic.twitter.com/0bweD1mbQC
— நகைச்சுவை மட்டும் (@tamilhumourjoke) March 18, 2022